iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: ஈரோடு


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1462076 ஆண் 715617
பெண் 746355 திருநங்கை 104
இறுதி வேட்பாளர் பட்டியல் --------------------------- 1. ஜி.மணிமாறன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2. அ.கணேசமூர்த்தி - திராவிட முன்னேற்ற கழகம் 3. கே.சி.செந்தில்குமார் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4. சீதாலட்சுமி - நாம் தமிழர் கட்சி 5. எ.சரவணக்குமார் - மக்கள் நீதி மய்யம் 6. எம்.கோபால் - பகுஜன் சமாஜ் கட்சி 7. பி.குப்புசாமி - உழைப்பாளி மக்கள் கட்சி 8. ஆர்.குப்புசாமி - இந்திய கணசங்கம் கட்சி 9. எ.அருணாச்சலம் - சுயேச்சை 10. பி.சித்ரா - சுயேச்சை 11. சி.கணேசமூர்த்தி - சுயேச்சை 12. கே.சுப்பிரமணியன் - சுயேச்சை 13. எம்.கணேசமூர்த்தி - சுயேச்சை 14. என்.பரமசிவன் - சுயேச்சை 15. பி.கார்த்திகேயன் - சுயேச்சை 16. எஸ்.தர்மலிங்கம் - சுயேச்சை 17. எஸ்.ஆனந்தி - சுயேச்சை 18. எ.நடராஜன் - சுயேச்சை 19. எ.கதிர்வேல் - சுயேச்சை 20. எ.மணி - சுயேச்சை தமிழக நாடாளுமன்ற தொகுதிகள் வரிசையில் 17–வது தொகுதியாக இடம் பெற்று இருப்பது ஈரோடு நாடாளுமன்ற தொகுதி. விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், என்று அனைத்து தரப்பினரையும் கொண்ட ஈரோடு தொகுதி கடந்த 2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்டதாகும். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி மற்றும் காங்கயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காங்கயம், தாராபுரம் தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், குமாரபாளையம் தொகுதி நாமக்கல் மாவட்டத்திலும் உள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதி முதன் முதலாக 2009–ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. அதற்கு முன்பு ஈரோடு(ஈரோடு கிழக்கு, மேற்கு என்று பிரிக்கப்படவில்லை), மொடக்குறிச்சி தொகுதிகள் திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்டவையாக இருந்தன. தொகுதிகள் மறுசீரமைப்பின்போது திருச்செங்கோடு தொகுதி ஈரோடு தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. திருச்செங்கோடு தொகுதியில் ஈரோடு, மொடக்குறிச்சி ஆகிய ஈரோடு மாவட்ட தொகுதிகளும், சங்ககிரி, திருச்செங்கோடு, கபிலர்மலை, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இருந்தன. இந்த தொகுதி 1951–ம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்தித்து வருகிறது. 1951–ம் ஆண்டு எஸ்.கே.பேபி என்பவர் சுயேச்சையாக வெற்றி பெற்றார். 1957–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சுப்பராயன் வெற்றி பெற்றார். அவர் 1962–ம் ஆண்டு தேர்தலிலும் வென்றார். 1967–ம் ஆண்டு தி.மு.க. சார்பில் க.அன்பழகன், 1971–ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த மா.முத்துசாமி, 1977–ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.குழந்தைவேலு ஆகியோர் வெற்றி பெற்றனர். 1980–ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதி எம்.பி.யாக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.கந்தசாமி வெற்றி பெற்றார். 1984–ம் ஆண்டு அ.தி.மு.க. வை சேர்ந்த பி.கண்ணன், 1989–ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கே.பழனிசாமி, 1991–ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.சவுந்தரம், 1996–ம் ஆண்டு தி.மு.க. சார்பில் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர். 1998–ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. இவர் திருச்செங்கோடு தொகுதி எம்.பி.யாக வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றார். ஆனால் ஒரே ஆண்டில் ஆட்சி கவிழ்ந்ததால் ஒரு ஆண்டு மட்டுமே எடப்பாடி பழனிசாமி எம்.பி.யாக இருந்தார். 1999–ம் ஆண்டு தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.கண்ணப்பன் வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி பெற்றார். திருச்செங்கோடு தொகுதியின் கடைசி எம்.பி. இவர்தான். 2008–ம் ஆண்டு ஈரோடு தொகுதி உருவாக்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மண்ணை தலைமையிடமாக கொண்டு ஈரோடு தொகுதி இயங்குவது இந்த தொகுதிக்கு பெருமையாகும். 2009–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்று ஈரோடு தொகுதியின் முதல் எம்.பி. என்ற பெருமையை பெற்றார். கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் எஸ்.செல்வகுமாரசின்னையன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வேளாள கவுண்டர், வேட்டுவ கவுண்டர், முதலியார், வன்னியர், நாடார், ஆதி திராவிடர் மக்கள் அதிக அளவில் உள்ளார்கள். நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள், வாணிய செட்டியார், தெலுங்கு நாயுடு சமூகத்தினர் உள்ளனர். மேலும், ஈரோடு மாநகர் பகுதியில் கணிசமான அளவு வடஇந்திய மக்களும் உள்ளனர். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஈரோட்டில் ஜவுளித்தொழிலை பெரிதும் பாதித்து இருப்பதாக ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகிறார்கள். உயர் மின்கோபுர பணிகள், குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம், விவசாய நிலங்கள் வழியாக குழாய் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லும் திட்டம் ஆகியவை ஆளும் கட்சியினர் மீது விவசாயிகளுக்கு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஆனால் வாக்காளர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.செல்வகுமார சின்னையன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– எஸ்.செல்வகுமார சின்னையன்(அ.தி.மு.க.) 4,66,995 அ.கணேசமூர்த்தி(ம.தி.மு.க.) 2,55,432 எச்.பவித்திரவள்ளி(தி.மு.க.) 2,17,260 ப.கோபி(காங்கிரஸ்) 26,726 சேதுபதி(பகுஜன் சமாஜ்) 5,910 இங்கு நோட்டா 16 ஆயிரத்து 268 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– குமாரபாளையம் (அ.தி.மு.க. வெற்றி) பி.தங்கமணி (அ.தி.மு.க.) 1,03,032 பி.யுவராஜ் (தி.மு.க.) 55,703 பி.ஏ.மாதேஸ்வரன் (தே.மு.தி.க.) 9,784 ஜி.அருண்குமார்(நாம்தமிழர் கட்சி) 2,908 ஆர்.பொன்னுசாமி (கொ.ம.தே.க.) 2,813 ஈரோடு கிழக்கு (அ.தி.மு.க. வெற்றி) கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) 64,879 வி.சி.சந்திரகுமார் (மக்கள் தே.மு.தி.க.) 57,085 பொன்.சேர்மன் (தே.மு.தி.க.) 6,776 பொன்.ராஜேஸ்குமார் (பா.ஜ.க.) 5,549 ஈரோடு மேற்கு (அ.தி.மு.க. வெற்றி) கே.வி.ராமலிங்கம் (அ.தி.மு.க.) 82,297 சு.முத்துசாமி (தி.மு.க.) 77,391 எம்.ஈஸ்வரமூர்த்தி (கொ.ம.தே.க.) 7,477 நா.முருகன் (ம.தி.மு.க.) 6,624 மொடக்குறிச்சி (அ.தி.மு.க. வெற்றி) வி.பி.சிவசுப்பிரமணி (அ.தி.மு.க.) 77,067 எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம் (தி.மு.க.) 74,845 எஸ்.சூரியமூர்த்தி (கொ.ம.தே.க.) 5,607 எம்.ரமேஷ் (தே.மு.தி.க.) 4,853 தாராபுரம் (காங்கிரஸ் வெற்றி) வி.எஸ்.காளிமுத்து(காங்கிரஸ்) 83,538 கே.பொன்னுசாமி (அ.தி.மு.க.) 73,521 எம்.சண்முகம்(பா.ஜனதா) 7,753 நாகை திருவள்ளுவன்(ம.தி.மு.க.) 7,029 கே.பழனியம்மாள்(கொ.ம.தே.க.) 1,662 காங்கயம் (அ.தி.மு.க. சின்னத்தில் கொங்கு இளைஞர் பேரவை வெற்றி) உ.தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை) 83,325 பி.கோபி (காங்கிரஸ்) 70,190 கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன் (ம.தி.மு.க.) 12,108 எம்.உஷாதேவி(பா.ஜனதா) 7,161 வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 14 லட்சத்து 27 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 13 பேர். பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 27 ஆயிரத்து 411 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 107 பேர். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– குமாரபாளையம் ........................... 2,36,205 ஈரோடு கிழக்கு ........................... 2,14,980 ஈரோடு மேற்கு ........................... 2,65,103 மொடக்குறிச்சி ........................... 2,24,960 தாராபுரம்(தனி) ........................... 2,45,970 காங்கயம் ........................... 2,40,313 வெற்றி யார் கையில்? ஈரோடு தொகுதி திருச்செங்கோடு தொகுதியாக இருந்த போது, தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தொகுதியாக இருந்தது. பின்னர் தி.மு.க., அ.தி.மு.க.வின் பலம் பொருந்திய தொகுதியாகவே இருந்திருக்கிறது. ம.தி.மு.க.வும் ஒரு முறை வெற்றி பெற்று இருக்கிறது. ஈரோடு தொகுதியாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னர் முதல் தேர்தலில் ம.தி.மு.க.வும், 2–வது தேர்தலில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்று இருக்கின்றன. தி.மு.க. கடந்த தேர்தலில் 3–ம் இடத்தை பிடித்தது. தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகள் நேரடியாக அ.தி.மு.க. வசம் உள்ளன. காங்கயம் தொகுதி அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவை வசம் இருந்தாலும் அதுவும் முழுமையாக அ.தி.மு.க.வின் தொகுதி கணக்கிலேயே இருக்கிறது. தாராபுரம் தனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. களம் இறங்குகிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ம.தி.மு.க. வேட்பாளராக அ.கணேசமூர்த்தி களம் இறங்கியுள்ளார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக வெங்கு என்கிற மணிமாறன் போட்டியிடுகிறார். ஏற்கனவே இந்த தொகுதியில் அ.தி.மு.க. பலம் பொருந்தியதாக உள்ளது. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோதே அவருக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிய காங்கயம் தொகுதி உள்ளிட்ட ஈரோடு பாராளுமன்ற தொகுதி மக்கள் அ.தி.மு.க.வின் விசுவாசிகளாகவே இருக்கிறார்கள். காங்கயம், மொடக்குறிச்சி, தாராபுரம் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள். ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகள் தி.மு.க.வுக்கு சாதகமானவை. எனவே கூட்டணி கட்சிகள் ஒருமுகப்பட்டு தேர்தலை சந்தித்தால் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் பலமான போட்டி நிறைந்த தொகுதியாக ஈரோடு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 152 வாக்காளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஓட்டுகள் வெற்றியை தீர்மானிக்கும் வாய்ப்பு உள்ளது. ஈரோடு தொகுதி எம்.பி.யின் 5 ஆண்டுகால செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கேட்டால், ‘அவரால் யாருக்கும் எந்த தொல்லையும் இல்லை. அனைவரிடமும் சகஜமாக பழகுபவர். எளிமையானவர், அமைதியானவர்’ என்கிறார்கள்.

வேட்பாளர் பட்டியல்

தேர்தல் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி

டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

தேர்தல் முடிவுகள்