iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: கள்ளக்குறிச்சி


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1528539 ஆண் 757882
பெண் 770478 திருநங்கை 179
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. பொன்.கவுதம் சிகாமணி - திராவிட முன்னேற்ற கழகம்-721713-வெற்றி 2. சக்திவேல் - பகுஜன் சமாஜ் கட்சி-4838 3. எல்.கே.சுதிஷ் - தேசிய திராவிட முற்போக்கு கழகம்-321794 4. எச்.கணேஷ் - மக்கள் நீதி மய்யம்-14587 5. எம்.சந்திர மோகன் - விவசாயிகள் மக்கள் முன்னேற்ற கட்சி-1108 6. எஸ்.சர்புதீன் - நாம் தமிழர் கட்சி-30246 7. எம்.கோமுகி மணியன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-50179 8. எஸ்.கண்ணண் - சுயேச்சை-1152 9. கே.ஆர் குமார் - சுயேச்சை -1411 10. ஏ.கோவிந்தசாமி - சுயேச்சை-938 11. ஏ.சதிஷ்குமார் - சுயேச்சை-938 12. ஜி.சதிஷ்குமார் - சுயேச்சை-1415 13. ஆர்.சதிஷ்குமார் - சுயேச்சை-3956 14. சந்திரசேகரன் - சுயேச்சை-8066 15. பி.சிவகுமார் - சுயேச்சை-1824 16. பி.சுமதி - சுயேச்சை-10045 17. டி.செல்வம் - சுயேச்சை-4426 18. எஸ்.நாகராஜன் - சுயேச்சை-1082 19. ஏ.பிரபு - சுயேச்சை-3182 20. சி.மணிகண்டன் - சுயேச்சை-1299 21. எம்.பி.மன்னன் - சுயேச்சை-1130 22. ஏ.மயிலாம்பாறை மாரி - சுயேச்சை-1151 23. கே.ராமசந்திரன் - சுயேச்சை-1306 24. ஆர்.ராமதாஸ் - சுயேச்சை-4927 25.நோட்டா-11576 விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையோரமாக உள்ள கள்ளக்குறிச்சி சமீபத்தில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியை சுற்றி திருவண்ணாமலை, சேலம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தொகுதி சீரமைப்பின்போதுதான் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதியதாக நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் (தனி), கெங்கவல்லி (தனி), ஏற்காடு (பழங்குடியினர்) என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நாடாளுமன்ற தொகுதியில் 3 தனி சட்டமன்ற தொகுதிகள், ஒரு பழங்குடியினர் தொகுதி, 2 பொது தொகுதிகள் உள்ளன. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆதிசங்கர் 3,63,601 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்ராஜ் (பா.ம.க) 2,54,762 வாக்குகளும், எல்.கே.சுதீஷ் (தே.மு.தி.க.) 1,32,126 வாக்குகளும் பெற்றனர். அதன் பிறகு 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட க.காமராஜ் 5,33,383 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.மணிமாறனை விட 2,23,507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் 3,09,876 வாக்குகளும், மக்கள் நல கூட்டணி சார்பில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் வி.பி.ஈஸ்வரன் 1,64,183 வாக்குகளும் பெற்றனர். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உடையார், பழங்குடியினர் அதற்கடுத்து கணிசமாக முதலியார், நாயுடு, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இப்பகுதியில் அதிகளவில் அரிசி ஆலைகள், மரவள்ளிக்கிழங்கு சாகோ பேக்டரி உள்ளது. சின்னசேலம்– கள்ளக்குறிச்சிக்கு ரெயில் பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி சுமார் 10 வருடங்களாக நிலத்தை அளப்பதாக ஏற்கனவே இருந்த எம்.பி. ஆதிசங்கர் (தி.மு.க.) கூறினார். தற்போது இருக்கும் அ.தி.மு.க. எம்.பி. காமராஜூம் இன்னும் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தவில்லை என்று கூறி வருவதாக பொதுமக்கள் குறையாக தெரிவிக்கிறார்கள். அதேபோல் கடந்த 2016–ம் ஆண்டு ரெயில் பாதை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஆனால் இதுவரை ரெயில் பாதை அமைக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. கள்ளக்குறிச்சியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ரிங்ரோடு அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டிட வசதி உள்ளது. ஆனால் போதுமான குழந்தை டாக்டர், சிறுநீரகம், இதயம், மூளை நரம்பியல் டாக்டர்கள் இல்லை. டாக்டர்கள் சிகிச்சை அளித்தாலும் மருந்து கொடுக்க போதுமான மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புணர்கள் இல்லை. பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்வதில்லை. கள்ளக்குறிச்சி பகுதியில் சிறு விபத்து ஏற்பட்டால்கூட சேலம் அல்லது விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும். கல்வராயன்மலையில் அதிகமாக கடுக்காய், மரவள்ளி பயிர் செய்யப்படுகிறது. அந்த பகுதியில் கடுக்காய் தொழிற்சாலை மற்றும் மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதேபோல் கல்வராயன்மலை மலைவாழ் மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், மருத்துவம், கல்வி வசதிகள் இல்லை. சங்கராபுரம் பகுதி மக்களின் கோரிக்கையான சின்னசேலத்தில் இருந்து– கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு ரெயில் இயக்க வேண்டும். அது நிறைவேற்றப்படவில்லை. தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை. ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள முஸ்குந்தா நதியின் குறுக்கே தடுப்பணை கட்டி இப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் விடவேண்டும். அதேபோல் இப்பகுதியில் உள்ள 2,370 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதி காடுகளை அழித்து நீலகிரி மரங்கள் நடப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் காட்டில் இருந்து வெளியேறி விவசாய பயிர்களை அழித்து வருகிறது. எனவே 30 சதவீதம் இயற்கை வனப்பகுதி காடுகளாக உருவாக்க வேண்டும். அரியலூர் பகுதியில் ரூ.2,370 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை மின் நிலையத்தால் விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து தொழிற்சாலைகள் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறவில்லை. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் முதல்–அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட க.காமராஜ் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்களின் விவரம் வருமாறு:– க.காமராஜ் (அ.தி.மு.க.)............................... 5,33,383 ஆர்.மணிமாறன் (தி.மு.க.)........................... 3,09,876 வி.பி.ஈஸ்வரன் (தே.மு.தி.க.)........................ 1,64,183 ஆர்.தேவதாஸ் (காங்கிரஸ்) ........................ 39,677 கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டுகள் விவரம் வருமாறு:– கள்ளக்குறிச்சி (அ.தி.மு.க வெற்றி)– (தற்போது அ.ம.மு.க.) அ.பிரபு (அ.தி.மு.க.) 90,108 பி.காமராஜ் (தி.மு.க.) 86,004 சி.ராமமூர்த்தி (வி.சி.க.) 17,492 செந்தமிழ்செல்வி (பா.ம.க.) 9,736 சங்கராபுரம் (தி.மு.க. வெற்றி) தா.உதயசூரியன் (தி.மு.க.) 90,920 ப.மோகன் (அ.தி.மு.க.) 76,392 சிவராமன் (பா.ம.க.) 13,612 கோவிந்தன் (தே.மு.தி.க.) 13,343 ரிஷிவந்தியம் (தி.மு.க. வெற்றி) வசந்தம்.கார்த்திகேயன் (தி.மு.க.) 92,607 கதிர்.தண்டபாணி (அ.தி.மு.க.) 72,104 வின்சென்ட்ஜெயராஜ் (தே.மு.தி.க.) 14,239 கே.பி.பாண்டியன் (பா.ம.க.) 8,119 ஏற்காடு (அ.தி.மு.க. வெற்றி) சித்ரா (அ.தி.மு.க.) 1,00,562 தமிழ்செல்வன் (தி.மு.க.) 83,168 செல்வம் (பா.ம.க.) 17,998 குமார் (தே.மு.தி.க.) 10,455 ஆத்தூர் (அ.தி.மு.க. வெற்றி) ஆர்.எம்.சின்னத்தம்பி (அ.தி.மு.க.) 82,827 அர்த்தநாரி (காங்கிரஸ்) 65,493 அம்சவேணி (பா.ம.க.) 18,363 ஆதித்யன் (வி.சி.க.) 8,532 கெங்கவல்லி (அ.தி.மு.க. வெற்றி) ஏ.மருதமுத்து (அ.தி.மு.க.) 74,301 ரேகாபிரியதர்சினி (தி.மு.க.) 72,039 சண்முகமூர்த்தி (பா.ம.க.) 10,715 சுபா (தே.மு.தி.க.) 7,114 கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 972 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்– 7,50,610, பெண் வாக்காளர்கள்–7,61,191, மூன்றாம் பாலினத்தினர்– 171. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– கள்ளக்குறிச்சி 2,70,006 சங்கராபுரம் 2,53,016 ரிஷிவந்தியம் 2,51,205 ஆத்தூர் 2,41,415 கெங்கவல்லி 2,25,843 ஏற்காடு 2,70,487 கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உருவான முதல் தேர்தலான 2009–ம் ஆண்டில் நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 2014 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பிரபு எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுக்கு சென்று விட்டார். இந்த தொகுதியை பொறுத்தவரை போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 1,21,803 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே இளம் வாக்காளர்கள் அளிக்கப்போகும் முதல் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும். தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராக எல்.கே.சுதீசும், தி.மு.க. வேட்பாளராக பொன்.கவுதம சிகாமணியும், அ.ம.மு.க. சார்பில் கோமுகி மணியனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர இன்னும் சிலரும் களத்தில் உள்ளனர். இருப்பினும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் 3 பேருக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யின் 5 ஆண்டுகால செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, அவர் தொகுதி பக்கம் வந்ததே இல்லை. அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வார். இவர் தத்தெடுத்த க.அலம்பளம் கிராமத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எந்த பணியும் செய்யவில்லை. 10 வருடங்களாக ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இவருடைய நிதியில் கட்டிடம் கட்டவோ, சிமெண்டு சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கவோ பயன்படுத்தவில்லை என்று கூறுகின்றனர்.

வேட்பாளர் பட்டியல்

சுதீஷ்.எல்.கே

தேமுதிக

கள்ளக்குறிச்சி

கவுதம் சிகாமணி.தெ

திமுக

கள்ளக்குறிச்சி

கோமுகி மணியன்.எம்

அ.ம.மு.க

கள்ளக்குறிச்சி

கணேஷ்.எச்

மக்கள் நீதி மய்யம்

கள்ளக்குறிச்சி

சர்புதீன்.எஸ்

நாம் தமிழர்

கள்ளக்குறிச்சி
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்