iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: கரூர்


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1603570 ஆண் 784719
பெண் 818780 திருநங்கை 71
இறுதி வேட்பாளர் பட்டியல் 2019 --------------------------- 1. மு.தம்பிதுரை - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2. செ.ஜோதிமணி - காங்கிரஸ் 3. பி.எஸ்.என்.தங்கவேல் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4. இரா.ஹரிஹரன் - மக்கள் நீதி மய்யம் 5. ஆர்.கருப்பையா - நாம் தமிழர் கட்சி 6. ஆதிகிருஷ்ணன் - பகுஜன் சமாஜ் கட்சி 7. நொய்யல் மா.ராமசாமி - தமிழ்நாடு இளைஞர் கட்சி 8. ம.மனோகரன் - அனைத்து மக்கள் புரட்சி கட்சி 9. ரா.ராமமூர்த்தி - உழைப்பாளி மக்கள் கட்சி 10. ஜெ.ஜோதிகுமார் - தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் 11. மு.அ.ஜோசப் - தேசிய மக்கள் சக்தி கட்சி 12. த.அன்பழகன் - சுயேச்சை 13. சு.அன்புக்கனி - சுயேச்சை 14. டி.உலகநாதன் - சுயேச்சை 15. செ.எபினேசர் - சுயேச்சை 16. த.ரா.கனகராஜ் - சுயேச்சை 17. பொ.கார்த்தி - சுயேச்சை 18. பா.கி.கார்த்திகேயன் - சுயேச்சை 19. மா.கார்த்திகேயன் - சுயேச்சை 20. செ.சதீஷ்குமார் - சுயேச்சை 21. க.சரஸ்வதி - சுயேச்சை 22. வி.சிவக்குமார் - சுயேச்சை 23. க.செல்வராஜ் - சுயேச்சை 24. கே.தாசப்பிரகாஷ் - சுயேச்சை 25. மா.நாகஜோதி - சுயேச்சை 26. பி.பழனிவேல் - சுயேச்சை 27. கோ.பாபு - சுயேச்சை 28. டி.பிச்சை முத்து - சுயேச்சை 29. நா.பிரகாஷ் - சுயேச்சை 30. த.பிரபாகரன் - சுயேச்சை 31. ச.புஷ்பஹென்ரிராஜ் - சுயேச்சை 32. அ.மகாமுனி - சுயேச்சை 33. கா.மகுடீஸ்வரன் - சுயேச்சை 34. கே.ஆர்.பி. முத்து - சுயேச்சை 35. கு.முத்துகுமார் - சுயேச்சை 36 சி.பொ.ரவி - சுயேச்சை 37. ம.ராமசந்திரன் - சுயேச்சை 38. ம.ராஜலிங்கம் - சுயேச்சை 39. க.ராஜேஸ்கண்ணன் - சுயேச்சை 40. மா.வரதன் - சுயேச்சை 41. பி.விக்னேஷ்வரன் - சுயேச்சை 42. ந.வினோத்குமார் - சுயேச்சை சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூரு மன்னர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு அந்த காலத்தில் ஆட்சி செய்த சிறப்பு கரூருக்கு உண்டு. அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்போதும் கூட கரூரில் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பஸ்பாடி கட்டுதல் என பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. முன்பு திருச்சியுடன் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கரூர், நிர்வாக காரணங்களுக்காக கடந்த 1995–ல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு உருவானது. அதன்படி கரூர் நாடாளுமன்ற தொகுதியானது, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. காங்கிரசின் கோட்டை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த கால வரலாற்றினை திரும்பி பார்க்கும்போது, காங்கிரசின் கோட்டையாகவே விளங்கி வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 6 முறையும், அ.தி.மு.க. 6 முறையும் மற்றும் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே.மூப்பனார்), ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957–ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பெரியசாமி கவுண்டர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து 1962–ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராமநாதன் செட்டியார் வெற்றி வாகை சூடினார். 1967–ம் ஆண்டு தேர்தலில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்ட முத்துசாமி கவுண்டர் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1971, 1977–ல் கோபால் மற்றும் 1980, 1984–ல் ஏ.ஆர்.முருகையா என தொடர்ந்து 4 முறை காங்கிரசாரே வெற்றி பெற்றுள்ளனர். அதன் பிறகு, 1989–ல் இருந்து கரூர் தொகுதியில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்தது. இதன் எதிரொலியாக 1989–ல் தம்பிதுரை, 1991–ல் முருகேசன் ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1996–ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கே.நாட்ராயன் வெற்றி பெற்றார். இதையடுத்து 1998–ல் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும், 1999–ல் அ.தி.மு.க. சார்பில் ம.சின்னசாமியும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2004–ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கே.சி.பழனிசாமி வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2009 மற்றும் 2014–ல் நடந்த தேர்தல்களில் தம்பிதுரை போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014–ல் நாடாளுமன்றத்துக்கு சென்ற தம்பிதுரை, துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 2014–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை 5,40,772 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ம.சின்னசாமி (தி.மு.க.) 3,45,475 வாக்குகளும் பெற்றனர். தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட என்.எஸ்.கிருஷ்ணன் 76,560 வாக்குகள் பெற்றார். தொழில்நகரமான கரூரில் 2 லட்சம் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2011–ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் 93.35 சதவீதமும், முஸ்லிம்கள் 5.01 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 1.55 சதவீதமும், புத்தம், ஜெயின் உள்ளிட்ட மதத்தவர் 1 சதவீதமும் வசிக்கின்றனர். 81.7 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். தம்பிதுரை எம்.பி.யாக இருந்த காலத்தில் வடமதுரை ரெயில் நிலையம் மூடப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளார். திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு ரூ.3,500 கோடியில் ஆறுவழிச்சாலை அமைப்பதற்கான பணி ஆய்வில் உள்ளது. கரூரின் சில இடங்களில் குகைவழிப்பாதையை ஏற்படுத்தியது மற்றும் சாலைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்காக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. தொடரும் பிரச்சினைகள் கரூர் தொகுதியில் ஜவுளி உற்பத்தி நிறுவனம் அதிகளவு இருப்பதால், நூலுக்கு சாயமேற்றுவது உள்ளிட்டவற்றுக்கான சாயப்பட்டறைகளும் இயங்குகின்றன. அமராவதி, நொய்யல் ஆறுகளில் அடிக்கடி சாயக்கழிவு கலப்பதால் நீராதாரம் பாதிப்படையும் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது. கரூரில் சாயக்கழிவால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையை 15 ஆண்டுகளாகியும் பெற்றுத்தர இயலவில்லை. கடந்த 2016–ல், கழிவே வெளிவராத வகையில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா ஏற்படுத்த ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு அந்த திட்டம் நின்று விட்டது. அதனை செயல்படுத்தினால் கரூர் உள்பட 3 மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். மேலும் வாங்கல், லாலாபேட்டை, குளித்தலை, நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் வாழை, நெல், கரும்பு, பருத்தி, சோளம், சூரியகாந்தி, கடலை ஆகியவை பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். மேலும் கரூரில் ஜவுளி வாரச்சந்தை ஏற்படுத்துவது, கோயம்பள்ளி அமராவதி ஆற்று பாலத்தை பயன்படுத்தும் வகையில் இணைப்புசாலை அமைப்பது, கரூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது, அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது, பஞ்சப்பட்டி–தாதம்பாளையம் ஏரிக்கு காவிரி மற்றும் அமராவதி ஆற்றிலிருந்து உபரிநீரை குழாய் மூலம் கொண்டு சென்று சேமித்து தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது, நலிவடைந்த கைத்தறி நெசவாளர்களை மீட்கவும்–அந்த தொழிலை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லவும் திட்டங்களை வகுப்பது, ராயனூரில் உள்ள சிதிலமடைந்துள்ள திப்புசுல்தான் போர் நினைவுத்தூணை புனரமைத்து அதனை வரலாற்று ஆர்வலர்கள் பார்வையிட்டு செல்ல வழிவகை செய்வது என மக்களின் கோரிக்கைகள் நீண்டு கொண்டே தான் செல்கின்றது. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– மு.தம்பிதுரை (அ.தி.மு.க.)................................5,40,772 ம.சின்னசாமி (தி.மு.க.).....................................3,45,475 என்.எஸ்.கிருஷ்ணன் (தே.மு.தி.க.).......................76,560 ஜோதிமணி (காங்கிரஸ்).......................................30,459 மருதைவீரன்(பகுஜன் சமாஜ் கட்சி).........................5,694 வாக்காளர்கள் எவ்வளவு? கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதே, கரூர் நாடாளுமன்ற தொகுதி ஆகும். கடந்த ஜனவரி மாதம் 31–ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி 6,69,115 ஆண்கள், 6,96,623 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 64 என மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 802 பேர் கரூர் தொகுதியின் வாக்காளர்களாக உள்ளனர். அதன் விவரம் வருமாறு:– கரூர்............................................2,30,557 அரவக்குறிச்சி..............................2,01,330 கிருஷ்ணராயபுரம்(தனி).................2,02,496 வேடசந்தூர் (திண்டுக்கல்).............2,50,468 மணப்பாறை (திருச்சி)....................2,71,979 விராலிமலை(புதுக்கோட்டை).........2,08,972 வெற்றி யார் கையில்? நாடு சுதந்திரம் அடைந்தபிறகு நீண்ட காலமாக காங்கிரசின் கோட்டையாகவே கரூர் இருந்தது. அதன் பின்னர் 1989–ல் இருந்து கரூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வே அதிக வெற்றிகளை பெற்றது. 2004–ம் ஆண்டு தேர்தலில் மட்டும் தி.மு.க. ஒரேயொரு வெற்றியை பெற்றிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சொந்தஊராக கொண்டிருந்த போதிலும், கரூர் தொகுதியில் தம்பிதுரை மட்டும் 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1996–ல் மட்டும் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட நாட்ராயன் வெற்றிவாகை சூடியதால், தம்பிதுரைக்கு 2–ம் இடம் கிடைத்தது. எனினும், 1998–ல் நடந்த தேர்தலில் தம்பிதுரை, நாட்ராயனை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இதில் தம்பிதுரை 3,27,480 வாக்குகளும், நாட்ராயன் 2,83,807 வாக்குகளும் பெற்றனர். 2016–ல் நடந்த கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மு.தம்பிதுரை, தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி, அ.ம.மு.க. சார்பில் என்.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டாக்டர் ஹரிகரன் உள்பட 42 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட தி.மு.க. தலைமையில் எதிர்பாராதவிதமாக திடீர் மாற்றம் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014–ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் தற்போது 67,480 புதிய வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே இளம்வாக்காளர்கள் அளிக்கப்போகும் முதல் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும். சமீபத்தில் கூட இளம்வாக்காளர்களை கவரும் நோக்கில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகளை வாரி வழங்கியபோதே அவர்களது தேர்தல் போட்டி தொடங்கி விட்டதை உணர முடிந்தது. தேர்தலிலும் அது எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மேகதாது, ஜி.எஸ்.டி., கஜாபுயல், உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தம்பிதுரை உரக்க குரல் எழுப்பினார். கரூர் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுவதால், மற்ற வேட்பாளர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– கரூர் (அ.தி.மு.க. வெற்றி) எம்.ஆர்.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) 81,936 பேங்க் சுப்ரமணியன் (காங்கிரஸ்) .81,495 ரவி (தே.மு.தி.க.) 6,491 சிவசாமி (பா.ஜ.க.) 3,995 கிருஷ்ணராயபுரம் (தனி)(அ.தி.மு.க. வெற்றி) ம.கீதா (அ.தி.மு.க.) 83,977 வி.கே.அய்யர் (புதிய தமிழகம் கட்சி) 48,676 சிவானந்தம் (த.மா.கா) 10,043 நவீன்குமார் (பா.ஜ.க.) 5,673 அரவக்குறிச்சி (அ.தி.மு.க. வெற்றி) (எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தால் தற்போது காலியிடம்) வி.செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.) (தற்போது தி.மு.க.வில் உள்ளார்) 88,068 கே.சி.பழனிசாமி (தி.மு.க.) 64,407 பிரபு (பா.ஜ.க.) 3,162 முத்து (தே.மு.தி.க.) 1,513 வேடசந்தூர் (அ.தி.மு.க. வெற்றி) வி.பி.பி.பரமசிவம் (அ.தி.மு.க.) 97,555 சக்திவேல் கவுண்டர் (காங்கிரஸ்) 77,617 பாலு (தே.மு.தி.க.) 12,445 கண்ணன் (சுயேச்சை) 2,512 மணப்பாறை (அ.தி.மு.க.வெற்றி) ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க.) 91,399 முகம்மது நிசாம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 73,122 கிருஷ்ணகோபால் (தே.மு.தி.க.) 26,316 செந்தில்தீபக் (பா.ஜ.க.) 4,154 விராலிமலை (அ.தி.மு.க. வெற்றி) சி.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) 84,701 எம்.பழனியப்பன் (தி.மு.க.) 76,254 கார்த்திகேயன் (தே.மு.தி.க.) 2,979 அடைக்கலம் (எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்) 1,089

வேட்பாளர் பட்டியல்

தேர்தல் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி

டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

தேர்தல் முடிவுகள்