iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்
  • முகிலன் மாயம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது- உயர்நீதிமன்றம்
  • மதுரை வக்ப் வாரியத்துக்கு சொந்தமான கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
  • ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்
  • |
  • முகிலன் மாயம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியான பாதையில் செல்கிறது- உயர்நீதிமன்றம்
  • |
  • மதுரை வக்ப் வாரியத்துக்கு சொந்தமான கல்லூரியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
  • |
  • ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
  • |

தொகுதி: நாமக்கல்


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1413246 ஆண் 695247
பெண் 717888 திருநங்கை 111
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. ப.காளியப்பன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-361142 2. ஏ.கே.பி.சின்ராஜ் -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-626293 -வெற்றி 3. பா.பாஸ்கர் - நாம் தமிழர் கட்சி -38531 4. ரா.தங்கவேலு மக்கள் நீதிமய்யம் -30947 5. பி.பி.சாமிநாதன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-23347 6. வெ.ராமன் - பகுஜன் சமாஜ் கட்சி -3579 7. தி.ரமேஷ் - அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி -972 8. சீ.செந்தில்முருகன் - தேசிய மக்கள் சக்தி கட்சி -644 9. சீ.மாணிக்கம் - உழைப்பாளி மக்கள் கட்சி-777 10. மு.பெ.முத்துசாமி - இந்திய கனசங்கம் கட்சி -1011 11. என்.கே.எஸ்.சக்திவேல் - சுயேச்சை-4398 12. வ.ஆறுமுகம் - சுயேச்சை -762 13. ந.ராமசாமி - சுயேச்சை -1868 14. ப.ராமசாமி - சுயேச்சை -726 15. கா.காளியப்பன் - சுயேச்சை-1821 16. செ.காளியப்பன் - சுயேச்சை -1177 17. பெ.காளியப்பன் - சுயேச்சை-2632 18. சு.சக்திவேல் - சுயேச்சை -2544 19. ர.சரவணவேல் - சுயேச்சை -2935 20. எஸ்.சிவாஜி - சுயேச்சை -341 21. சு.செல்லத்துரை - சுயேச்சை-288 22. கே.ஆர்.செல்வராஜ் - சுயேச்சை -448 23. வெ.சோ - சுயேச்சை -459 24. மு.நடராஜன் - சுயேச்சை -2362 25. ப.நல்லதம்பி - சுயேச்சை-526 26. கு.பிரபு - சுயேச்சை -587 27. ரா.ரமேஷ் - சுயேச்சை-683 28. வி.வினோத்குமார் - சுயேச்சை -4857 29. பா.விஜயகார்த்திகேயன் - சுயேச்சை-2044 30. நோட்டா-15073 நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி முட்டை மற்றும் லாரி தொழிலில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1951–ம் ஆண்டு திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதி மட்டுமே இருந்தது. இது கடந்த 1957–ம் ஆண்டு தேர்தலின்போது நாமக்கல், திருச்செங்கோடு என இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் 1967–ம் ஆண்டு மீண்டும் நாமக்கல், திருச்செங்கோடு தொகுதிகள் இணைக்கப்பட்டு, திருச்செங்கோடு தொகுதி உருவாக்கப்பட்டது. 1977–ம் ஆண்டு மீண்டும் திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதி திருச்செங்கோடு, ராசிபுரம் என இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டது. இதேநிலை 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை நீடித்தது. இந்த நிலையில் கடந்த 2006–ம் ஆண்டு தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதிகளை ஒன்றாக இணைத்து மீண்டும் நாமக்கல் என்ற ஒரே நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. முந்தைய திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியில் கபிலர்மலை, திருச்செங்கோடு, சங்ககிரி (தனி), எடப்பாடி, ஈரோடு, மொடக்குறிச்சி என 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. ராசிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சின்னசேலம், ஆத்தூர், தலைவாசல் (தனி), ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் (தனி) என 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று இருந்தன. சட்டமன்ற தொகுதிகளை பொறுத்த வரையில் நாமக்கல் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு இருந்த சங்ககிரி தொகுதி சீரமைப்புக்கு பிறகு சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதேசமயம் நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. இதேபோல் கபிலர்மலை என்ற பெயரில் இருந்த சட்டமன்ற தொகுதி தற்போது பரமத்திவேலூர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 2005–ம் ஆண்டு வரை தனி தொகுதியாக இருந்த நாமக்கல் சட்டமன்ற தொகுதி பொது தொகுதியாக மாற்றப்பட்டது. இதற்கு பதிலாக ஏற்கனவே பொது தொகுதியாக இருந்த ராசிபுரம் தனி தொகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் தொகுதிகள் பொது தொகுதிகளாகவும், சேந்தமங்கலம் தனி தொகுதியாகவும் நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த 2009–ம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்ட நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட காந்திசெல்வன் 1 லட்சத்து 2 ஆயிரத்து 431 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் காந்திசெல்வனை 2 லட்சத்து 94 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பி.காளியப்பன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் சின்ராஜ் நிறுத்தப்பட்டு உள்ளார். அ.ம.மு.க. சார்பில் பி.பி.சாமிநாதன் போட்டியிடுகிறார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய 3 நகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சுற்று வட்டச்சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதிலும் மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு. அதுவும் அறிவிப்போடு நிற்கிறது. முட்டை உற்பத்திக்கு பெயர் பெற்ற நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை தொழில் மேலும் வளர்ச்சிபெறும் வகையில் முட்டை ஏற்றுமதிக்கு தனி மண்டலம் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள பண்ணையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதேபோல் முட்டைகளை பாதுகாக்க அரசு சார்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்பதும் ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சியினரின் வாக்குறுதியாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. லாரி தொழிலை மேம்படுத்த உதிரிபாகம் உற்பத்தி செய்யும் கூடம் மற்றும் தனி தொழிற்பேட்டை அமைக்கும் திட்டமும் இதுவரை செயல்படுத்தவில்லை. கல்வி நகரமான நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இதுவரை பூர்த்தியாகவில்லை. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் லாரி தொழிலை நம்பி ஏராளமானவர்கள் உள்ளனர். டீசல் விலை உயர்வால் இவர்கள் லாரி தொழிலையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் அழுத்தமான கோரிக்கையாகும். ஆனால் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சாயப்பட்டறை தொழிலுக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ராஜா வாய்க்கால் ‘ரீமாடலிங்’ செய்தல், பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் அமைத்தல் என நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் ஏராளம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.சுந்தரம் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– பி.ஆர்.சுந்தரம் (அ.தி.மு.க.)........................5,63,272 காந்திசெல்வன் (தி.மு.க.)...........................2,68,898 எஸ்.கே.வேல் (தே.மு.தி.க.).........................1,46,882 ஜி.ஆர்.சுப்பிரமணியன் (காங்கிரஸ்)................19,800 டாக்டர் செல்லகுமாரசாமி (ஆம் ஆத்மி)............4,348 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– நாமக்கல் (அ.தி.மு.க. வெற்றி) கே.பி.பி.பாஸ்கர் (அ.தி.மு.க.)..............................89,076 செழியன் (காங்கிரஸ்)..........................................75,542 மாதேஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி).............10,506 இளங்கோ (த.மா.கா).............................................4,341 ராசிபுரம் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) டாக்டர் சரோஜா (அ.தி.மு.க.)...............................86,901 வி.பி.துரைசாமி (தி.மு.க.)....................................77,270 புஷ்பகாந்தி (பா.ம.க.).............................................6,952 அர்ஜூன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)...............4,341 திருச்செங்கோடு (அ.தி.மு.க. வெற்றி) பொன்.சரஸ்வதி (அ.தி.மு.க.)...............................73,103 பார்.இளங்கோவன் (தி.மு.க.)...............................69,713 விஜயகமல் (தே.மு.தி.க.)......................................6,688 நதி ராஜவேல் (கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி)...........6,471 சேந்தமங்கலம் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) சந்திரசேகரன் (அ.தி.மு.க.)..................................91,339 பொன்னுசாமி (தி.மு.க.).......................................79,006 சத்யா (தே.மு.தி.க.)...............................................5,609 சின்னுசாமி (கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி)....4,014 பரமத்திவேலூர் (தி.மு.க. வெற்றி) கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க.)....................................74,418 ஆர்.ராஜேந்திரன் (அ.தி.மு.க.).............................73,600 முத்துக்குமார் (தே.மு.தி.க.)....................................6,014 பூபதி (கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி)..............5,116 சங்ககிரி (அ.தி.மு.க. வெற்றி) எஸ்.ராஜா (அ.தி.மு.க.)........................................96,202 டி.கே.ராஜேஸ்வரன் (காங்கிரஸ்)...........................58,828 பி.கண்ணன் (பா.ம.க.).........................................37,927 கே.செல்வகுமார் (த.மா.கா.)...................................5,633 வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 98 ஆயிரத்து 365 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,88,450 பேர். பெண் வாக்காளர்கள் 7,09,807 பேர். 3–ம் பாலினத்தவர் 108. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– சங்ககிரி........................................2,60,151 ராசிபுரம் (தனி)...............................2,27,291 சேந்தமங்கலம் (தனி)......................2,32,861 நாமக்கல்.......................................2,46,199 பரமத்திவேலூர்..............................2,11,527 திருச்செங்கோடு...........................2,20,336 நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கல்வி அறிவு பெற்றவர்கள் 79.51 சதவீதம் பேர் உள்ளனர். 2009–ம் ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்ட நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.விடம் இருந்து அ.தி.மு.க. வெற்றியை தட்டி பறித்தது. இரு பிரதான கட்சிகளும் தலா ஒருமுறை வெற்றி என்ற நிலையில், அடுத்த வெற்றியை பெற இருகட்சியினரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்று அசுர பலத்துடன் உள்ளது. பரமத்திவேலூர் தொகுதி மட்டும் தி.மு.க.விடம் உள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது நாமக்கல் தொகுதியில் மொத்தம் 13,29,094 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் 69,271 வாக்காளர்கள் அதிகரித்து உள்ளனர். முதல்முறை வாக்களிக்க போகும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 19,204 ஆகும். எனவே இளம் வாக்காளர்களின் முதல் ஓட்டும் இந்த தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்வதாக அமையும். தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதி எம்.பி.யின் 5 ஆண்டுகால செயல்பாடு குறித்து மக்களிடம் கேட்டபோது, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் மட்டுமே அவர் தவறாமல் கலந்து கொள்கிறார். நாமக்கல்லில் எம்.பி. தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு, சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது. அதன்பிறகு அது மூடப்பட்டு விட்டது. ஓட்டு கேட்டு வந்தபோது எம்.பி.யிடம் நிறைய கோரிக்கைகள் முன்வைத்தோம். அவரும் வெற்றி பெற்றால் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் அதில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தனர்.

வேட்பாளர் பட்டியல்

தங்கவேல்.ஆர்

மக்கள் நீதி மய்யம்

நாமக்கல்

ப.காளியப்பன்

அதிமுக

நாமக்கல்

சாமிநாதன்.பி.பி

அ.ம.மு.க

நாமக்கல்

சின்ராஜ்.ஏ.கே.பி

கொமதேக

நாமக்கல்

பாஸ்கர்.பி

நாம் தமிழர்

நாமக்கல்
தேர்தல் செய்திகள்

எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை- தங்கதமிழ்செல்வன் பேட்டி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்

அதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு

தேர்தல் முடிவுகள்