iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: நீலகிரி (தனி)


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1365608 ஆண் 665337
பெண் 700202 திருநங்கை 69
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. மா.தியாகராஜன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 342009 2. ஆ.ராசா - திராவிட முன்னேற்ற கழகம் - 547832 (வெற்றி) 3. அசோக்குமார் - பகுஜன் சமாஜ் கட்சி - 4088 4. ராஜேந்திரன் - மக்கள் நீதி மய்யம் - 41169 5. எம்.ராமசாமி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 40419 6. ஆறுமுகம் - சுயேச்சை - 1619 7. சுப்ரமணி - சுயேச்சை - 5219 8. நாகராஜன் - சுயேச்சை - 2199 9. ராஜரத்தினம் - சுயேச்சை - 4746 10. ராஜா - சுயேச்சை - 3254 11. எவரும் இல்லை - 18096 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. மலைப்பிரதேசமான நீலகிரி 65 சதவீத வனப்பகுதிகள் மற்றும் 35 சதவீத நிலப்பரப்புகளை கொண்டு உள்ளது. தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. தோடர், கோத்தர், இருளர், காட்டு நாயக்கர், குரும்பர், பனியர் ஆகிய ஆதிவாசி மக்கள் வனப்பகுதியை ஒட்டி வாழ்ந்து வருகின்றனர். மேலும் படுகர் சமுதாய மக்கள் அட்டி என்று அழைக்கப்படும் கிராமங்களில் வசிக்கின்றனர். தற்போது இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளது. முதலில் நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதி மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), தொண்டாமுத்தூர், ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பொது தொகுதியாக இருந்தது. இந்த நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1957–ம் ஆண்டு கூடலூர் ஓவேலியில் தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்த சி.நஞ்சப்பா(காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 1962–ம் ஆண்டு குன்னூர் உபதலை கிராமத்தை சேர்ந்த அக்கம்மா தேவி(காங்கிரஸ்) வெற்றி வாகை சூடினார். காங்கிரஸ் வெற்றி 1967–ம் ஆண்டு கேத்தி அச்சனக்கல் கிராமத்தை சேர்ந்த எம்.கே.நஞ்சா கவுடர்(சுதந்திரா கட்சி) வெற்றி பெற்றார். 1971–ம் ஆண்டு கோத்தகிரி அரவேனுவை சேர்ந்த மாதா கவுடர் (தி.மு.க.) வெற்றி வாகை சூடினார். 1977–ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் (அ.தி.மு.க.) வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆர்.பிரபு 1980, 1984, 1989, 1991–ம் ஆண்டுகளில் தொடர்ந்து 4 முறை வென்றார். 1996–ம் ஆண்டு கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்(தமிழ் மாநில காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 1998 மற்றும் 1999–ம் ஆண்டுகளில் ஊட்டியை சேர்ந்த மாஸ்டர் மாதன்(பா.ஜனதா) வெற்றி வாகை சூடினார். 2004–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆர்.பிரபு (காங்கிரஸ்) வெற்றி பெற்றார். 2009–ம் ஆண்டு தொண்டாமுத்தூர் தொகுதி நீக்கப்பட்டு ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர்(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுடன் நீலகிரி தனி தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆ.ராசா (தி.மு.க.) வெற்றி பெற்றார். 2014–ம் ஆண்டு குன்னூரை சேர்ந்த சி.கோபாலகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 4 லட்சத்து 63 ஆயிரத்து 700 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆ.ராசா (தி.மு.க.) 3 லட்சத்து 58 ஆயிரத்து 760 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி சார்பில் தாக்கல் செய்த குருமூர்த்தியின் வேட்புமனுவில் சரியான விவரங்கள் குறிப்பிடப்படாததால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எப்.) தொழிற்சாலை மூடப்பட்டதால் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். கூடலூர் பகுதியில் செக்‌ஷன் 17 நில பிரச்சினை காரணமாக பட்டா, மின் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஓவேலி, சூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய தமிழர்கள் 10 ஆயிரம் பேர் அடங்குவர். மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக நிலம்பூருக்கு ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டத்தை கடந்த மத்திய காங்கிரஸ் அரசு பரிசீலித்தது. ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்பட வில்லை. தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பாண்டியாறு–புன்னம்புழா திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஊட்டியில் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்தப்படவில்லை. மஞ்சூரில் குந்தா நீர் மின் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஊட்டியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு நவீன சொகுசு பஸ்கள் இயக்கப்படும் என்ற அரசு அறிவிப்பும் நிறைவேறவில்லை. பவானிசாகர் அணைக்கு முன்பகுதியில் உள்ள பாலம் சீரமைக்கப்படாமல் கிடப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. திம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு இல்லை. நீலகிரி தொகுதியில் உள்ள அவினாசியில் குடிநீர் பிரச்சினை தற்போது பூதாகரமாக உள்ளது. 22 நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அத்திக்கடவு–அவினாசி திட்டம் முழுமை அடைந்த பிறகுதான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிகிறது. அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவினாசி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பவானி ஆற்றங்கரையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி இருந்தாலும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையை போக்கவும், தொழிற்சாலை கழிவுகளால் பவானி ஆறு மாசுபடுவதை தடுக்கவும், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சிறுமுகையில் ஜவுளி பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சி.கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– சி.கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.) .............4,63,700 ஆ.ராசா(தி.மு.க.) ............................3,58,760 பி.காந்தி(காங்கிரஸ்)........................................37,702 நோட்டா ..........................................46,559 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– ஊட்டி (காங்கிரஸ் வெற்றி) ஆர்.கணேஷ்(காங்கிரஸ்) ...................................67,742 டி.வினோத்(அ.தி.மு.க.)......................................57,329 ராமன்(பா.ஜனதா) ...................................5,818 டாக்டர் கிங்(தே.மு.தி.க.)......................................4,011 குன்னூர்(அ.தி.மு.க. வெற்றி) சாந்தி ராமு(அ.தி.மு.க.) ...........................61,650 பா.மு.முபாரக்(தி.மு.க.)..............................57,940 வி.சிதம்பரம்(தே.மு.தி.க.).............................3,988 பி.குமரன்(பா.ஜனதா)...................................3,547 கூடலூர்(தனி)(தி.மு.க. வெற்றி) மு.திராவிடமணி(தி.மு.க.).............................62,128 கலைச்செல்வன்(அ.தி.மு.க.)...........................48,749 தமிழ்மணி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)...................9,044 அன்பரசன்(பா.ஜனதா)..................................5,548 மேட்டுப்பாளையம்(அ.தி.மு.க. வெற்றி) ஓ.கே.சின்னராஜ்(அ.தி.மு.க.) .........................93,595 சு.சுரேந்திரன்(தி.மு.க.) ................................77,481 சண்முகசுந்தரம்(த.மா.க)................................13,324 வி.பி.ஜெகந்நாதன்(பா.ஜனதா).........................11,036 அவினாசி(தனி) (அ.தி.மு.க. வெற்றி) ப.தனபால்(அ.தி.மு.க.)...................................93,366 சி.ஆனந்தன்(தி.மு.க.).....................................62,692 ஆறுமுகம்(இந்திய கம்யூனிஸ்டு)...........................15,016 பெருமாள் பா.ஜனதா)......................................8,081 பவானிசாகர்(தனி) (அ.தி.மு.க. வெற்றி) ஈஸ்வரன்(அ.தி.மு.க.) ...................................83,006 ஆர்.சத்தியா(தி.மு.க.)...................................69,902 சுந்தரம்(இந்திய கம்யூனிஸ்டு)............................27,965 என்.ஆர்.பழனிச்சாமி(பா.ஜனதா).........................3,557 வெற்றி யார் கையில்? நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 7 முறை வென்று காங்கிரஸ் கோட்டையாக இருந்து உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா தலா 2 முறை வெற்றி பெற்று உள்ளது. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாகை சூடியது. 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் உள்ள குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர் (தனி) ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், கூடலூர் (தனி) தொகுதியில் தி.மு.க.வும், ஊட்டியில் காங்கிரசும் வெற்றி பெற்று உள்ளன. இதில் அ.தி.மு.க. முன்னிலை வகிக்கிறது. 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது நீலகிரி தொகுதியில் 12 லட்சத்து 41 ஆயிரத்து 437 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் 13 லட்சத்து 49 ஆயிரத்து 740 ஆக உயர்ந்து உள்ளது. அதாவது 1 லட்சத்து 8 ஆயிரத்து 303 வாக்காளர்கள் அதிகரித்து உள்ளனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க.–தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்ந்த இளம் வாக்காளர்கள் அளிக்கப்போகும் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எம்.தியாகராஜனும், தி.மு.க. சார்பில் ஆ.ராசாவும் களத்தில் நிற்கிறார்கள். அ.ம.மு.க. சார்பில் ராமசாமியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர். தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் பிரசாரம் நடந்து வருகிறது.

வேட்பாளர் பட்டியல்

ராஜேந்திரன்

மக்கள் நீதி மய்யம்

நீலகிரி (தனி)

தியாகராஜன்.எம்

அதிமுக

நீலகிரி (தனி)

ராமசாமி.எம்

அ.ம.மு.க

நீலகிரி (தனி)

ஆ.ராஜா

திமுக

நீலகிரி (தனி)
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்