iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: சேலம்


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1611982 ஆண் 809760
பெண் 802132 திருநங்கை 90
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாரு: 1. கே.ஆர்.எஸ். சரவணன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 459376 2. எஸ்.ஆர்.பார்த்திபன் - திராவிட முன்னேற்ற கழகம் - 606302 (வெற்றி) 3. எஸ்.கே.செல்வம் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 52332 4. பிரபு மணிகண்டன் - மக்கள் நீதி மய்யம் - 58662 5. ராசா - நாம் தமிழர் கட்சி - 33890 6. சடையன் - பகுஜன் சமாஜ் கட்சி - 3543 7. சிலம்பரசன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி - 4563 8.மோகன் - சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப் இந்தியா(கம்யூனிஸ்ட்) - 777 9. அகமது ஷாஜகான் - சுயேச்சை - 1369 10. கலைமன்னன் - சுயேச்சை - 636 11. சிவராமன் - சுயேச்சை - 4273 12. சுருளிவேல் - சுயேச்சை - 1102 13. தமிழரசன் - சுயேச்சை - 1148 14. நடராஜன் - சுயேச்சை - 1679 15. பிரவீணா - சுயேச்சை - 1461 16. மணிமாறன் - சுயேச்சை - 1991 17. மாதேஸ்வரன் - சுயேச்சை - 773 18. மூர்த்தி காமராஜர் - சுயேச்சை - 1465 19. ரவி - சுயேச்சை - 1556 20. ராமச்சந்திரன் - சுயேச்சை - 440 21. ராஜா - சுயேச்சை - 450 22. ஹரிஹரன் - சுயேச்சை - 541 23. எவரும் இல்லை - 17130 கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது சேலம் நாடாளுமன்ற தொகுதி. மாம்பழத்திற்கு புகழ்பெற்ற சேலத்தில், மரவள்ளி கிழங்கு சாகுபடி மற்றும் கைத்தறி, விசைத்தறி நூற்பாலைகள், வெள்ளி கொலுசு பட்டறைகள், இரும்பாலை, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, வெல்லம் தயாரிப்பு மற்றும் மாக்னசைட் தொழில்களும் நடந்து வருகிறது. இங்குள்ள லீ பஜார் மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்கு பெயர் பெற்றது. சேலம் தொகுதியில் வன்னியர், வெள்ளாளக்கவுண்டர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முதலியார், செட்டியார், சவுராஷ்டிரா சமூகத்தினர் உள்ளனர். மேலும், நாடார், ரெட்டியார், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. சேலம் நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது, 1952–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், தி.மு.க. 3 முறையும், த.மா.கா. ஒரு முறையும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, காங்கிரஸ் 7 முறை வென்றதில், 3 முறை தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளது. மீதம் 4 முறை கூட்டணி வைத்தே வெற்றிக்கனியை பறித்துள்ளது. 1952–ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.வி.ராமசாமி வெற்றி வாகை சூடினார். 1957, 1962–ம் ஆண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.வி.ராமசாமியும், 1967–ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் க.ராசாராம் மற்றும் 1971–ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் இ.ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் வென்றனர். 1977–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கண்ணன் முதன் முறையாக வெற்றி வாகையை சூடினார். 1980–ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் சி.பழனியப்பனும், 1984, 1989, 1991–ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலம் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்‘ சாதனை படைத்தார். 1996–ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் தேவதாசும், 1998–ம் ஆண்டு தேர்தலில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் வேட்பாளர் வாழப்பாடி ராமமூர்த்தியும், 1999–ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியும், 2004–ம் ஆண்டு காங்கிரஸ்–தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலுவும், 2009–ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் செம்மலையும் வெற்றி பெற்றனர். 2014–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறக்கப்பட்ட வி.பன்னீர்செல்வம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தி.மு.க.வேட்பாளர் எஸ்.உமாராணியை 2 லட்சத்து 67 ஆயிரத்து 610 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ், 2 லட்சத்து ஆயிரத்து 265 வாக்குகள் பெற்று 3–வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணனும், தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபனும், அ.மு.மு.க. சார்பில் எஸ்.கே.செல்வமும் போட்டியிடுகிறார்கள். பிரச்சினைகள் என்ன? சேலம் மாநகரில் குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ்நிலையம், 4 ரோடு வரையிலும், மற்றொரு இடமான ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் இருந்து 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, ராமகிருஷ்ணா ரோடு வரையிலும் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ்நிலையம் வரையிலும் ஈரடுக்கு மேம்பாலம் அமைவது சிறப்புக்குரியது. தமிழகத்திலேயே வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் சேலம் மாநகரில் மட்டுமே மிக நீளமான உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த பணிகளையும், முள்ளுவாடி கேட் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே சேலம் மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டத்தை அமல்படுத்தி, தொகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். ஓமலூரில் வாசனை திரவியம் தொழிற்சாலையும், பூக்களை பதப்படுத்தி வைக்கக்கூடிய குளிர்பதன கிடங்கும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல், கிழக்கு, மேற்கு சரபங்கா நதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் சேலம் கருப்பூர் அருகே நவீன வசதிகளுடன் பஸ் போர்ட் அமைப்பது, அம்மாபேட்டையில் ஜவுளி பூங்கா என நிறைவேற்றப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உள்ளன. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– வி.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)...................5,56,546 எஸ்.உமாராணி (தி.மு.க.)............................2,88,936 எல்.கே.சுதீஷ் (தே.மு.தி.க.)..........................2,01,265 ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்)......46,477 இ.சதீஷ்குமார் (ஆம் ஆத்மி)..............................5,198 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– ஓமலூர் (அ.தி.மு.க. வெற்றி) எஸ்.வெற்றிவேல் (அ.தி.மு.க.)......................,..89,169 எஸ். அம்மாசி (தி.மு.க.)..................................69,213 ஏ.தமிழரசு (பா.ம.க.).......................................48,721 ஏ.ஆர். இளங்கோவன் (தே.மு.தி.க.).................9,744 எடப்பாடி (அ.தி.மு.க. வெற்றி) எடப்பாடி கே. பழனிசாமி (அ.தி.மு.க.)..............98,703 என். அண்ணாதுரை (பா.ம.க.).........................56,681 பி.எம். முருகேசன் (தி.மு.க.)............................55,149 பி.தங்கவேல் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)............5,437 சேலம் மேற்கு (அ.தி.மு.க. வெற்றி) ஜி.வெங்கடாசலம் (அ.தி.மு.க.)........................80,755 சி.பன்னீர்செல்வம் (தி.மு.க.)............................73,508 இரா.அருள் (பா.ம.க.).......................................29,982 அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தே.மு.தி.க.)......8,962 சேலம் வடக்கு (தி.மு.க. வெற்றி) ஆர்.ராஜேந்திரன் (தி.மு.க.)............................86,583 கே.ஆர்.எஸ்.சரவணன் (அ.தி.மு.க.)...............76,710 கதிர் ராசரத்தினம் (பா.ம.க.).............................7,975 ஆர்.பி.கோபிநாத் (பா.ஜ.க.).............................5,922 சேலம தெற்கு (அ.தி.மு.க. வெற்றி) ஏ.பி.சக்திவேல் (அ.தி.மு.க.).........................1,01,696 எம்.குணசேகரன் (தி.மு.க.)............................71,243 கே.குமார் (பா.ம.க.).........................................6,325 என்.அண்ணாதுரை (பா.ஜ.க.)..........................4,686 வீரபாண்டி (அ.தி.மு.க. வெற்றி) பி.மனோன்மணி (அ.தி.மு.க.)........................94,792 வீரபாண்டி ராஜா (தி.மு.க.)..............................80,311 ஏ.ஆர்.பி.சாம்ராஜ் (பா.ம.க.).............................17,218 ஏ.மோகன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி).............6,483 வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 487 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 320. பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 92 ஆயிரத்து 90. மூன்றாம் பாலினத்தினர் 77 ஆகும். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– ஓமலூர்........................................2,78,624 எடப்பாடி.......................................2,71,332 சேலம் மேற்கு................................2,82,137 சேலம் வடக்கு...............................2,62,656 சேலம் தெற்கு................................2,51,855 வீரபாண்டி.....................................2,45,883 சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் அ.தி.மு.க. தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த முறையும் 3–வதாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்‘ சாதனை படைக்கவும், சேலம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாகவும், தொகுதியை தங்கள் வசம் தக்க வைப்பதற்கு அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள். 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி ஆகிய 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி வாகை சூடியுள்ளது. சேலம் வடக்கு தொகுதி மட்டுமே தி.மு.க. வசம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 843 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே, இளம் வாக்காளர்கள் அளிக்கப்போகும் முதல்வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும். அதேசமயம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி என்பதாலும், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து இருப்பதாலும் இந்தமுறையும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். அதேசமயம், தி.மு.க. கூட்டணியில் சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்பட்டால் வெற்றி கனியை பறிக்க வாய்ப்பு இருக்கிறது. சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யின் 5 ஆண்டுகால செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, கடந்த 5 ஆண்டுகளில் பிரச்சினைகள் பெரிய அளவில் ஒன்றும் தீர்க்கப்படவில்லை. தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று குறிப்பிட்ட இடங்களில் ஆழ்துளை கிணறு மற்றும் தண்ணீர் தொட்டி அமைத்தல், உயர்மின் கோபுர விளக்குகள், புதிய ரே‌ஷன் கடை, சாக்கடை கால்வாய் சீரமைப்பு, பயணிகள் நிழற்குடை, சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை மட்டும் செய்து கொடுத்துள்ளார். ஆனால் மத்திய அரசிடம் வலியுறுத்தி பெரிய திட்டங்களையும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பெரிய தொழிற்சாலையை கொண்டு வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வேட்பாளர் பட்டியல்

பிரபு மணிகண்டன்.எம்

மக்கள் நீதி மய்யம்

சேலம்

சரவணன்.கே.ஆர்.எஸ்.

அதிமுக

சேலம்

வீரபாண்டி எஸ்.கே.செல்வம்

அ.ம.மு.க

சேலம்

பார்த்திபன்.எஸ்.ஆர்

திமுக

சேலம்

ராசா

நாம் தமிழர்

சேலம்
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்