iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: தென்காசி (தனி)


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1488944 ஆண் 732490
பெண் 756376 திருநங்கை 78
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. டாக்டர் கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் 2. தனுஷ் எம்.குமார் - திராவிட முன்னேற்ற கழகம் 3. சு.பொன்னுத்தாய் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4. முனீஸ்வரன் - மக்கள் நீதி மய்யம் 5. மதிவாணன் - நாம் தமிழர் கட்சி 6. ரவி - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி 7. சிவஜெயபிரகாஷ் - சுயேச்சை 8. சுந்தரம் - சுயேச்சை 9. சுப்பையா - சுயேச்சை 10. சூரியரகுபதி - சுயேச்சை 11. தங்கராஜ் - சுயேச்சை 12. தாமரை செல்வன் - சுயேச்சை 13. பழனிச்சாமி - சுயேச்சை 14. கோ.பொன்னுத்தாய் - சுயேச்சை 15. செல்வகுமார் - சுயேச்சை 16. தனுஷ்கோடி - சுயேச்சை 17. ரா.பொன்னுச்சாமி - சுயேச்சை 18. ம.பொன்னுத்தாய் - சுயேச்சை 19. மா.பொன்னுத்தாய் - சுயேச்சை 20. முத்துமுருகன் - சுயேச்சை 21. வைரவன் - சுயேச்சை 22. பரதராஜ் - சுயேச்சை 23. பெருமாள்சாமி - சுயேச்சை 24 மூர்த்தி - சுயேச்சை 25. தீபன் அருண் - சுயேச்சை தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில். 1957 - சங்கரபாண்டியன் - காங்கிரசு 1962 - சாமி - காங்கிரஸ் 1967 - ஆர்எஸ் ஆறுமுகம் - காங்கிரசு 1971 - செல்லச்சாமி - காங்கிரஸ் 1977 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1980 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1984 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1989 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1991 - எம். அருணாச்சலம் - காங்கிரஸ் 1996 - எம். அருணாச்சலம் - தா.மா.க. 1998 - முருகேசன் - அதிமுக 2004 - அப்பாத்துரை - சிபிஐ 2009 - பி. லிங்கம் - சிபிஐ 2014 - வசந்தி முருகேசன் அ.தி.மு.க தென்காசி (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியின் நட்சத்திர வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியை எதிர்த்து திமுக, அமமுகவில் விருதுநகர் மாவட்ட அரசியல் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி யை உடைக்கும் வகையில் திமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமார் முதன் முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். இதே போன்று, அமமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் ஒன்றியத் தலைவர் எஸ்.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அதிமுகவில் அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர் இவர் என்பதால் தென்காசி (தனி) தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் அதிமு கவை வளர்த்தவர் தனுஷ்கோடி. இவர், 1977-ல் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1996-2001 வரை ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். திமுக மாவட்டச் செயலாளராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோடு ஒரே காலகட்டத்தில் அரசியலில் வலம் வந்து, அவர் திமுகவில் இணைந்தபோது தனுஷ்கோடியும் திமுகவில் இணைந்தவர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் தனுஷ்கோடி. இதன் காரணமாகவே கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்சி மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தென்காசி தொகுதியில் போட்டியிட தனுஷ் எம்.குமாருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிரான வாக்குகளை திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பெறுவார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதேபோன்று, ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருக்கும் அழகாபுரியானின் மகள்தான் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்னுத்தாய். இவர், 2011-16-ல் ராஜபாளையம் ஒன்றியக்குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அழகாபுரியான் மேலப் பாட்டம் கரிசல் குளத்தில் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். தந்தை மகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர் மற்றும் அதிகாரம் செலுத்துவதில் குறுக்கீடு போன்ற பிரச்சினையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுகவில் பொன்னுத்தாய் இணைந்தார். தற்போது அமமுகவில் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிரணி இணைச் செய லாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளரைத் தேடி வந்த அமமுக இத்தொகுதியில் பொன்னுத்தாயை களம் இறக்கியுள்ளது. தென்காசி தொகுதியில் திமுக, புதிய தமிழகம், அமமுக வேட்பாளர்களுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர்களின் செல்வாக்கு, பிரச்சார உத்திகள் ஆகியவைதான் இங்கு வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலை உள்ளது.

வேட்பாளர் பட்டியல்

தேர்தல் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி

டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

தேர்தல் முடிவுகள்