iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: தஞ்சாவூர்


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1460266 ஆண் 710968
பெண் 749201 திருநங்கை 97
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------ 1. எஸ்.எஸ்.பழனிமானிக்கம் - திராவிட முன்னேற்ற கழகம் 2. முருகேசன்.பி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 3. கிருஷ்ணகுமார்.என் - நாம் தமிழர் கட்சி 4. சம்பத் ராமதாஸ் - மக்கள் நீதி மய்யம் 5. நடராஜன்.என்.ஆர் - தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 6. ஸ்டாலின்.ஆர் - பகுஜன் சமாஜ் கட்சி 7. பனசய்யாரங்கன்.கே.என் - தேசிய மக்க்ள் சக்தி கட்சி 8. அப்துல் ஹரி - சுயேட்சை 9. சம்ந்தா.கே.எஸ் - சுயேட்சை 10. செல்வராஜ்.ஆர் - சுயேட்சை 11. முத்துவேல்.எஸ் - சுயேட்சை 12. விஜயகுமார்.டி - சுயேட்சை ---------------------------------- விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தஞ்சை நாடாளுமன்ற தொகுதி 1957–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 16 முறை தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சை, திருவையாறு, பாபநாசம், வலங்கைமான்(தனி) ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. 2008–ம் ஆண்டு தொகுதி வரையறை மூலம் இத்தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே இடம் பெற்று இருந்த தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய சட்டசபை தொகுதிகள் மீண்டும் இடம் பெற்றது. மேலும் புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்று இருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டசபை தொகுதியும், நாகை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்று இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதியும் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இருந்த திருவோணம், வலங்கைமான் தொகுதிகள் நீக்கப்பட்டன. தற்போது தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளும் பொதுத்தொகுதிகளாகும். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாற்றை புரட்டிப்பார்க்கும்போது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வசமாகவே இருந்தது. இங்கு காங்கிரஸ் 7 முறையும், தி.மு.க. 7 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. 2 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 1957–ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962–ல் காங்கிரசை சேர்ந்த வைரவத்தேவர் வெற்றி பெற்றார். 1967–ல் சோமசுந்தர கோபாலர், 1971–ல் எஸ்.டி.சோமசுந்தரம் என தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்த எஸ்.டி.சோமசுந்தரம் 1977–ல் வெற்றி பெற்றார். பின்னர் 1979, 1980, 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிங்காரவடிவேல், 1991–ல் துளசி அய்யா வாண்டையார் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் தஞ்சை தொகுதி தி.மு.க. கோட்டையாகவே விளங்கி வந்தது. 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். கடைசியாக 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கு.பரசுராமன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் கு.பரசுராமன் 5 லட்சத்து 10 ஆயிரத்து 307 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு 3 லட்சத்து 66 ஆயிரத்து 188 வாக்குகளும் பெற்றனர். அதற்கு அடுத்தபடியாக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தம் 58 ஆயிரத்து 521 வாக்குகள் பெற்றார். 1979–ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்க விரும்பினார். அப்போது மத்தியில் இருந்த ஜனதா அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்திராகாந்தியை ஆதரிக்க அப்போதைய முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. இதையடுத்து அவர் இங்கு போட்டியிடவில்லை. தஞ்சை தொகுதியை பொறுத்தவரை 95 சதவீதம் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இங்கு 4 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடியும், 15 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடியும் மேலும் வாழை, வெற்றிலை, மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, எள் என பணப்பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் காவிரி நீரையும், பருவமழையையும் நம்பியே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் சரியாக வராததாலும், போதிய அளவு மழை பெய்யாததாலும் நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் இருந்தும் இன்னும் மக்கள் மீள முடியாமல் உள்ளனர். தென்னை, வெற்றிலை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தொகுதியை பொறுத்தவரை காவிரி நீர் பிரச்சினை தான் பிரதான பிரச்சினையாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தாலும், இதுவரை உரிய காவிரி நீர் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தவிர டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக மத்திய அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மீத்தேன் திட்டம், எண்ணெய் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் போன்ற திட்டங்களால் டெல்டா பகுதி பாலைவனம் ஆகும் என விவசாயிகள் மத்தியில் அச்சம் உள்ளது. தஞ்சை தொகுதியை பொறுத்தவரை பாதியில் விடப்பட்ட சுற்றுச்சாலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியது, தஞ்சைக்கு மாநகராட்சி அந்தஸ்து, மேம்பாலங்கள், பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவை புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். தஞ்சை–பட்டுக்கோட்டை, தஞ்சை–அரியலூர் இடையே ரெயில்பாதை அமைக்க வேண்டும். தஞ்சையில் இருந்து விமான சேவை தொடங்கப்பட வேண்டும். விவசாயம் சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதோடு, புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். இப்படி தஞ்சை தொகுதியை எடுத்துக்கொண்டால் குறைகளுக்கு பஞ்சம் இல்லை. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கு.பரசுராமன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– கு.பரசுராமன் (அ.தி.மு.க.)...........................5,10,307 டி.ஆர்.பாலு (தி.மு.க.)..................................3,66,188 கருப்பு முருகானந்தம் (பா.ஜ.க.).......................58,521 கிருஷ்ணசாமி வாண்டையார்(காங்.)................30,232 தமிழ்ச்செல்வி (மார்க்சிய கம்யூ.)......................23,215 வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 14,43,378 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,03,967. பெண் வாக்காளர்கள் 7,39,314. மூன்றாம் பாலினத்தவர் 97. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– தஞ்சை......................................2,71,799 ஒரத்தநாடு.................................2,28,884 திருவையாறு..............................2,53,708 பட்டுக்கோட்டை..........................2,31,489 பேராவூரணி................................2,09,38 மன்னார்குடி................................2,48,103 வெற்றி யார் கையில்? தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3 தொகுதிகள் அ.தி.மு.க. வசமும், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி தொகுதிகள் தி.மு.க. வசமும் உள்ளது. இதில் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரெங்கசாமி டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றார். பின்னர் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் நாடாளுமன்ற தேர்தலோடு தஞ்சை சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் 2 கட்சிகளின் பலமும் சமமாக உள்ளது. திருவையாறு, மன்னார்குடியில் கணிசமான வாக்கு வித்தியாசத்திலும், ஒரத்தநாடு தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலும் தி.மு.க. வென்றது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். தி.மு.க.வுக்கு, காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பலம் இருப்பதால் இந்த முறை வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் தி.மு.க. பிரசாரத்தை தொடங்கி உள்ளது. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தஞ்சை, பட்டுக்கோட்டை தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்திலும், பேராவூரணி தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலும் வென்றது. அ.தி.மு.க. வசம் இருந்த தஞ்சை தொகுதியை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுத்ததில் தொண்டர்களுக்கு சற்று வருத்தம் தான். என்றாலும் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா., புதிய தமிழகம் என கட்சிகளின் கூட்டணி அணிவகுப்பை பார்த்தால் த.மா.கா. வேட்பாளருக்கு பலம் கூடி இருக்கிறது. இது தவிர அ.ம.மு.க. சார்பில் பேராசிரியர் பொன்.முருகேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார், மக்கள் நீதிமய்யம் சார்பில் சம்பத் ராமதாஸ் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இதனால் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. எனவே தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிக்கனியை பறிக்க தி.மு.க. மற்றும் த.மா.கா. கடுமையாக மல்லுக்கட்டும் என்றே தெரிகிறது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஒட்டு விவரம் வருமாறு:– தஞ்சை (அ.தி.மு.க. வெற்றி) எம்.ரெங்கசாமி (அ.தி.மு.க.)...................1,01,362 அஞ்சுகம் பூபதி (தி.மு.க.)........................74,488 ராமலிங்கம் (பா.ஜ.க.)................................3,806 ஜெயப்பிரகாஷ் (தே.மு.தி.க.)......................1,534 ஒரத்தநாடு (தி.மு.க. வெற்றி) எம்.ராமச்சந்திரன் (தி.மு.க.).....................84,378 ஆர்.வைத்திலிங்கம் (அ.தி.மு.க.).............80,733 டாக்டர் ராமநாதன் (தே.மு.தி.க.).................6,351 கந்தசாமி (நாம்தமிழர் கட்சி)........................1,891 திருவையாறு (தி.மு.க. வெற்றி) துரை.சந்திரசேகரன் (தி.மு.க.)...............1,00,043 எம்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)..............85,700 ஜீவக்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூ.).................8,604 சண்முகம் (நாம்தமிழர் கட்சி)......................1,806 பட்டுக்கோட்டை (அ.தி.மு.க. வெற்றி) சி.வி.சேகர் (அ.தி.மு.க.)..........................70,631 மகேந்திரன் (காங்.)..................................58,273 செந்தில்குமார் (தே.மு.தி.க.) 11,231 முருகானந்தம் (பா.ஜ.க.) 11,039 பேராவூரணி (அ.தி.மு.க. வெற்றி) கோவிந்தராசு (அ.தி.மு.க.) 73,908 அசோக்குமார் (தி.மு.க.) 72,913 தமயந்தி (இந்திய கம்யூ.) 5,816 இளங்கோ (பா.ஜ.க.) 4,612 மன்னார்குடி (தி.மு.க. வெற்றி) டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.) 91,137 காமராஜ் (அ.தி.மு.க.) 81,200 முருகையன்பாபு (தே.மு.தி.க.) 5,966 பாலசுப்பிரமணியன் (பா.ம.க.) 1983

வேட்பாளர் பட்டியல்

தேர்தல் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி

டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

தேர்தல் முடிவுகள்