iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: தேனி


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1554051 ஆண் 768562
பெண் 785306 திருநங்கை 183
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. ப.ரவீந்திரநாத்குமார் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 504813 வெற்றி 2. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - காங்கிரஸ் - 428120 3. தங்கதமிழ்செல்வன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 144050 4. சாகுல் அமீது - நாம் தமிழர் கட்சி - 27864 5. கே.ராதாகிருஷ்ணன் - மக்கள் நீதி மய்யம் - 16879 6. க.ஆறுமுகம் - பகுஜன் சமாஜ் கட்சி - 3770 7. பா.அல்லிக்கொடி - சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் - 4044 8. தி.சின்னசத்தியமூர்த்தி - எஸ்.யு.சி.ஐ. கம்யூனிஸ்டு - 2597 9. கு.ராமராஜ் - உழைப்பாளி மக்கள் கட்சி - 779 10. சி.அலெக்ஸ்பாண்டியன் - சுயேச்சை - 3217 11. அன்னக்கிளி - சுயேச்சை - 5258 12. க.ரவிச்சந்திரன் - சுயேச்சை - 1043 13. ஈஸ்வரன் - சுயேச்சை - 803 14. குணசிங் - சுயேச்சை - 724 15. ப.குமரகுருபரன் - சுயேச்சை - 1602 16. ஜெ.கேசவராஜா - சுயேச்சை - 1815 17. பெ.சிலம்பரசன் - சுயேச்சை - 4198 18. அ.சிவமுனியாண்டி - சுயேச்சை - 1908 19. ஜெ.செந்தில்குமார் - சுயேச்சை - 2172 20. கோ.பார்த்திபன் - சுயேச்சை - 1813 21. பா.பிரகாஷ் - சுயேச்சை - 839 22. சி.மணிமுருகன் - சுயேச்சை - 353 23. க.ராமச்சந்திரன் - சுயேச்சை - 291 24. எஸ்.ராமமூர்த்தி - சுயேச்சை - 273 25. வெ.ராஜசேகரன் - சுயேச்சை - 274 26. செ.ராஜரிஷிகுருதேவ் - சுயேச்சை - 614 27. ப.ராஜ்குமார் - சுயேச்சை - 290 28. க.பெ.வேல்முருகன் - சுயேச்சை - 926 29. அ.வையத்துரை - சுயேச்சை - 1022 30. கு.ஜெயமணி - சுயேச்சை - 452 31. எவரும் இல்லை - 10686 ஏலக்காய் மணம் வீச, தென்மேற்கு பருவமழை சாரலாய் தூறும் தொகுதி தேனி. ஒருபக்கம் வளமும், மற்றொரு புறம் வறட்சியுமாக அமையப்பெற்ற பகுதிகளை கொண்டது இந்த தொகுதி. 2008–ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு, அது தேனி நாடாளுமன்ற தொகுதியாக மாறியது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 14 பொதுத்தேர்தலையும், ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்து உள்ளது. இதில், அ.தி.மு.க. (இடைத்தேர்தல் உள்பட) 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க. 2 முறையும், சுதந்திரா கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியாக உருவான பின்னர் 2 முறை பொதுத்தேர்தலை சந்தித்து உள்ளது. 2009–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் ரசீத் 3 லட்சத்து 40 ஆயிரத்து 575 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை 6 ஆயிரத்து 302 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பார்த்திபன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 254 வாக்குகள் பெற்று, தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி அடைந்தார். இந்த தொகுதியின் முதன்மையான பிரச்சினையாக முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி. இந்த நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள கடந்த 2014–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறி உள்ளது. ஆனால், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. தேவாரம் அருகே பொட்டிப்புரம், டி.புதுக்கோட்டை பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. போடி–மதுரை இடையே இயக்கப்பட்ட மீட்டர்கேஜ் ரெயில் கடந்த 2010–ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டப் பணிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் சில ஆண்டுகள் முடங்கிக் கிடந்தன. கடந்த ஆண்டு தான் பணிகள் சற்று வேகம் எடுத்துள்ளன. இந்த திட்டத்துக்கு ஒரே தவணையில் முழு நிதியையும் ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல், திண்டுக்கல்–குமுளி அகல ரெயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் அரைநூற்றாண்டுக்கும் மேலான கனவாக உள்ளது. சாக்குலூத்து மெட்டுச்சாலை, குரங்கணி–டாப்ஸ்டே‌ஷன் மலைப்பாதை, போடி–அகமலை மலைப்பாதை அமைக்கும் பணிகள் அறிவிப்போடும், ஆய்வுப் பணிகளோடும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகநதி அணை போன்றவை தூர்வாரப்படாமல் உள்ளன. மாவட்டத்தில் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு கூலி வேலைக்கு ஜீப்களில் சென்று வருகின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பெரியகுளம், போடி, கம்பம் பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடக்கிறது. மாம்பழத்தில் இருந்து பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா திட்டம் குறித்து 14 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மாவூற்று வேலப்பர் கோவில் அருகே திப்பரேவு அணை கட்டுவதற்கும், மூலவைகை பகுதியில் அணை கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இன்று வரை அணைகள் கட்டுவதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த அணைகள் விவசாயிகளின் கனவு திட்டங்களாகவே உள்ளன. இதுபோன்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக தீர்க்கப்படாத அடுக்கடுக்கான பிரச்சினைகள் ஏராளம் இந்த தொகுதியில் உள்ளன. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? ------------------------------------ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– ஆர்.பார்த்திபன் (அ.தி.மு.க.) ..................... 5,71,254 பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) ............ 2,56,722 கே.அழகுசுந்தரம் (ம.தி.மு.க.) ................... 1,34,362 ஜே.எம்.ஆரூண்ரசீத் (காங்கிரஸ்) ............... 71,432 வி.தங்கத்துரை (பகுஜன் சமாஜ்) ................ 5,299 வெற்றி யார் கையில்? ------------------------ தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்பு புதிதாக உருவான தேனி நாடாளுமன்ற தொகுதியில் முதல் வெற்றியை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் பெற்றது. 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி உடைந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் 3 லட்சத்து 14 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. கோட்டையாக உருவெடுத்தது. பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த கடைசி தேர்தலிலும், தேனி நாடாளுமன்ற தொகுதியாக உருவான முதல் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தான் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை மீண்டும் தி.மு.க. கூட்டணியில் தேனி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளராக ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சாகுல்அமீது ஆகியோர் உள்பட மொத்தம் 30 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கடந்த முறை பெற்ற வெற்றியை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க.வினரும், இழந்த வெற்றியை மீண்டும் பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசார களத்தில் உள்ளனர். அதேநேரத்தில் டி.டி.வி.தினகரனுக்கான செல்வாக்கும் இங்கு கணிசமான அளவில் உள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்கதமிழ்செல்வனே அ.ம.மு.க.வின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் 30 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் சுமார் 3 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கியே வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளும் வருவதால், அந்த தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதால், அந்த தேர்தல் பிரசார யுத்திகளும், நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தேனி எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது, ‘அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் தான் அவரை அதிகம் பார்க்க முடிகிறது. வெற்றி பெற்ற பின்பு தொகுதிக்குள் அவர் சென்ற பகுதிகளை தவிர, போகாத ஊர்களே அதிகம். தொகுதி மக்களின் குறைகளை அறிந்து, நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை’ என்றனர். வாக்காளர்கள் எவ்வளவு? ------------------------- கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தேனி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 32 ஆயிரத்து 240 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 58 ஆயிரத்து 557. பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 73 ஆயிரத்து 506. மூன்றாம் பாலினத்தவர்கள் 177. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– சோழவந்தான் (தனி) – 2,10,236 உசிலம்பட்டி – 2,69,323 ஆண்டிப்பட்டி – 2,58,820 பெரியகுளம் (தனி) – 2,64,787 போடிநாயக்கனூர் – 2,61,021 கம்பம் – 2,68,053 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேனி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்று இருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– ஆண்டிப்பட்டி (அ.தி.மு.க. வெற்றி) தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)...................1,03,129 எல்.மூக்கையா (தி.மு.க.)................................ 72,933 எம்.என்.கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க)..............10,776 எஸ்.ஆர்.சக்கரவர்த்தி (பா.ஜ.க.)........................ 3,465 பெரியகுளம் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) கே.கதிர்காமு (அ.தி.மு.க.).............................90,599 வி.அன்பழகன் (தி.மு.க.)............................... 76,249 ஏ.லாசர் (மா.கம்யூ.).......................................13,525 கே.செல்லம் (பா.ஜ.க.).....................................5,015 போடிநாயக்கனூர் (அ.தி.மு.க. வெற்றி) ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.)....................... 99,531 எஸ்.லட்சுமணன் (தி.மு.க.).............................. 83,923 ஏ.வீரபத்திரன் (தே.மு.தி.க.) ..........................6,889 வி.வெங்கடேஸ்வரன் (பா.ஜ.க.)......................3,250 கம்பம் (அ.தி.மு.க. வெற்றி) எஸ்.டி.கே.ஜக்கையன் (அ.தி.மு.க.).................91,099 கம்பம் என்.ராமகிருஷ்ணன் (தி.மு.க.)..............79,878 ஓ.ஆர்.ராமச்சந்திரன் (த.மா.கா.).......................10,149 என்.பிரபாகரன் (பா.ஜ.க.)..................................3,971 சோழவந்தான் (தனி) (அ.தி.மு.க. வெற்றி) கே.மாணிக்கம் (அ.தி.மு.க.).............................87,044 சி.பவானி (தி.மு.க.)..........................................62,187 ஆர்.பாண்டியம்மாள் (வி.சி.க.)............................7,357 எஸ்.பழனிவேல்சாமி (பா.ஜ.க.)............................ 2,766 உசிலம்பட்டி (அ.தி.மு.க. வெற்றி) பி.நீதிபதி (அ.தி.மு.க.)....................................1,06,349 கே.இளமகிழன் (தி.மு.க)...................................73,443 ஏ.பாஸ்கரசேதுபதி (ம.தி.மு.க)..............................7,079 பி.வி.கதிரவன் (அ.இ.பார்வர்டு பிளாக்).................5,136

வேட்பாளர் பட்டியல்

ரவீந்திரநாத் குமார்.ப

அதிமுக

தேனி

ராதாகிருஷ்ணன்.எஸ்

மக்கள் நீதி மய்யம்

தேனி

சாகுல் அமீது

நாம் தமிழர்

தேனி

இளங்கோவன்.இ.வி.கே.எஸ்

காங்கிரஸ்

தேனி

தங்க தமிழ்செல்வன்

அ.ம.மு.க

தேனி
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்