iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: திருச்சிராப்பள்ளி


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1508329 ஆண் 739241
பெண் 768940 திருநங்கை 148
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. டாக்டர் வி.இளங்கோவன் - தேசிய முற்போக்கு திராவிட கழகம்- 161999 2. எஸ்.திருநாவுக்கரசர் - காங்கிரஸ்-621285-வெற்றி 3. சாருபாலா ஆர்.தொண்டைமான் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-100818 4. வி.ஆனந்தராஜா - மக்கள் நீதி மய்யம்-42134 5. வி.வினோத் - நாம் தமிழர் கட்சி -65286 6. எஸ்.பாலமுருகன் - பகுஜன் சமாஜ் கட்சி-3961 7. ப.ஆசைத்தம்பி - இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்)-2685 8. ச.ஏசுதாஸ் - இந்திய கிறிஸ்தவர் முன்னணி-1303 9. ப.கணேசன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-1324 10 எஸ்.நாச்சி - தேசிய உழவர் உழைப்பாளர் கழகம்-2368 11. ஏ.அருணாசலம் - சுயேச்சை-4892 12. ஆர்.கணேஷ் - சுயேச்சை-1223 13. சி.கருப்பையா - சுயேச்சை-1218 14. கே.காமராஜ் - சுயேச்சை-731 15. க.ம.கார்த்திக் - சுயேச்சை-2136 16. வி.கோபால கிருஷ்ணன் - சுயேச்சை-2532 17. அ.சாதிக் பாட்சா - சுயேச்சை-3376 18. ப.சுந்தர ராஜன் - சுயேச்சை-3451 19. இ.செல்ல பெருமாள் - சுயேச்சை-2241 20. எஸ்.திருநாவுக்கரசு - சுயேச்சை-3669 21. துரை பெஞ்சமின் - சுயேச்சை-876 22. க.புஷ்பராஜ் - சுயேச்சை-1604 23. பி.விஜயகுமார் - சுயேச்சை-1354 24. சே.ஜெயராம் மேத்தா - சுயேச்சை-1159 25.நோட்டா-14437 --------------------------------------------- தமிழகத்தின் மிக பழமையான நாடாளுமன்ற தொகுதி என்ற பெருமைக்குரியது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை உறுப்பினர் தேர்தல் முறை அமலில் இருந்த காலத்திலேயே தொடங்குகிறது. இதன் பழமையான வரலாற்றிற்கேற்ப முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவர்களான கே.அனந்த நம்பியார், எம். கல்யாணசுந்தரம் ஆகியோரை தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த பெருமையும் இத்தொகுதிக்கு உண்டு. இந்திய அளவில் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா அந்தஸ்து பெற்ற ‘பெல்’ எனப்படும் பாய்லர் ஆலை, துப்பாக்கி தொழிற்சாலை ஆகிய முக்கிய தொழிற்சாலைகளையும், தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம், தேசிய சட்டப்பல்கலைக்கழகம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோவில், நத்தர்ஷா பள்ளி வாசல், 150 ஆண்டு வரலாற்றுக்கு சொந்தமான லூர்து அன்னை ஆலயம் போன்ற ஆன்மிக தலங்களும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ளன. 2009–ம் ஆண்டில் நடந்த தொகுதிகள் மறு சீரமைப்புக்கு பின்னர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்று உள்ளன. தொகுதிகள் மறு சீரமைப்பின்போது புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி கலைக்கப்பட்டதால் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1952–ம் ஆண்டு நடந்த தேர்தலில் டாக்டர் இ.பி.மதுரம் (சுயே), 1957–ல் அப்துல் சலாம் (காங்கிரஸ்), 1962, மற்றும் 1967–ல் தொடர்ச்சியாக இரண்டு முறை கே.அனந்த நம்பியார் (கம்யூ.), 1971 மற்றும் 1977–ல் தொடர்ச்சியாக இரண்டு முறை எம். கல்யாணசுந்தரம் (கம்யூ.) வெற்றி பெற்றனர். 1980–ல் என்.செல்வராஜ் (தி.மு.க.) வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து எல்.அடைக்கலராஜ் (காங்.) 1984, 1989, 1991–ம் ஆண்டுகளில் நடந்த 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். அவரது வெற்றியானது 1996–ல் த.மா.கா. சார்பில் அவர் போட்டியிட்டபோதும் தொடர்ந்தது. அடைக்கலராஜின் சங்கிலி தொடர் வெற்றிக்கு 1998 நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிட்ட ரெங்கராஜன் குமார மங்கலம் முடிவு கட்டினார். அந்த தேர்தலில் அடைக்கலராஜை சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ரெங்கராஜன் குமாரமங்கலம், ஆட்சி கவிழ்ப்பு காரணமாக மறு ஆண்டில் அதாவது 1999–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அடைக்கலராஜை 89 ஆயிரத்து 197 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றார். ரெங்கராஜன் குமாரமங்கலம் மரணம் அடைந்ததால் 2001–ல் ஏற்பட்ட இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் தலித் எழில்மலை வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எல். கணேசன் (ம.தி.மு.க.) வெற்றி பெற்றார். 2009–ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானை அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ப.குமார் வீழ்த்தி வெற்றி பெற்றார். அவரது வெற்றி 2014–ம் ஆண்டு தேர்தலிலும் தொடர்ந்தது. 2014–ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக மு.அன்பழகனும், அ.தி.மு.க. வேட்பாளராக மீண்டும் ப.குமாரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் குமார் அன்பழகனைவிட சுமார் 1½ லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று தனது எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொண்டார். அனைத்து இன, சமுதாய மக்கள், காவிரி கரையில் இருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த ஒரு தொகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதி உள்ளது. திருச்சி தொகுதி மக்களின் நிரந்தரமான தொழில் விவசாயம் தான் என்றாலும் பாய்லர் ஆலையை சார்ந்து உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஏராளமான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வந்ததால் திருவெறும்பூர், துவாக்குடி, அரியமங்கலம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் ஏராளமான வேலைவாய்ப்பு பெற்றனர். பாய்லர் ஆலைக்கு ஏற்பட்ட திடீர் பின்னடைவால் அதனை நம்பி இருந்த பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் அவற்றில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ வழியின்றி தவித்து வருகிறார்கள். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழக முதல்–அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதற்கு பின்னர் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் தமிழக அரசின் காகித ஆலை நிறுவனம் மூலம் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இது பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் மணப்பாறை அருகே 1000 ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. உள்ளூர் பிரச்சினை தான் என்றாலும் திருச்சி மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையான ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படாதது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணி, ஓடுபாதை நீட்டிப்புடன் திருச்சி விமான நிலைய விரிவாக்கம், 65 சென்ட் நிலத்தை ராணுவ இலாகாவிடம் இருந்து வாங்க முடியாததால் அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் திருச்சி ஜங்‌ஷன் ரெயில்வே மேம்பால பணி, அரிய மங்கலம் பழைய பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரை 14 கி.மீ. நீளத்திற்கு அணுகுசாலை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது ஆகியவை திருச்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. ப.குமார் எம்.பி. (அ.தி.மு.க) தனது சாதனையாக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை ரூ.950 கோடியில் விரிவு படுத்தும் பணியை தொடங்கி இருப்பது, திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைத்து கொடுத்திருப்பது, திருச்சி மாநகராட்சியை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெற செய்தது, துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்கப்படுவதில் இருந்து தடுத்து நிறுத்தியது, திருச்சியில் ரூ.86 லட்சத்தில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்தது, கந்தர்வகோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைத்தது, திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் சாலை, குடிநீர், மின் விளக்கு ஆகிய அடிப்படை வசதிகளுக்காக சுமார் ரூ.6 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு உள்ளார். 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? --------------------------------------- கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ப.குமார் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– ப.குமார் (அ.தி.மு.க.)....................................4,58,478 மு. அன்பழகன் (தி.மு.க.)..............................3,08,002 விஜயகுமார் (தே.மு.தி.க.)..............................94,785 சாருபாலா தொண்டைமான் (காங்.)..................51,537 வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 14,89,267 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,30,668, பெண் வாக்காளர்கள் 7,58,459. மூன்றாம் பாலினத்தவர்கள் 140. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– ஸ்ரீரங்கம்.........................................2,91,711 திருச்சி மேற்கு................................2,57,089 திருச்சி கிழக்கு...............................2,44,662 திருவெறும்பூர்..................................2,79,937 கந்தர்வகோட்டை............................1,89,106 புதுக்கோட்டை.................................2,26,762 வெற்றி யார் கையில்? ------------------------ திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற 16 தேர்தல்களில் கம்யூனிஸ்டு கட்சிகள் 4 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், ஒரு இடைத்தேர்தல் உள்பட 3 தேர்தல்களில் அ.தி.மு.க.வும், பாரதீய ஜனதா 2 தேர்தல்களிலும், தி.மு.க, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன. அ.தி.மு.க. 1972–ல் தொடங்கப்பட்டிருந்தாலும் திருச்சியில் முதன் முதலாக போட்டியிட்டது 2001 இடைத்தேர்தலில் தான். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்று உள்ளது. அதன் பின்னர் 2009–ல் இருந்து தொகுதியை தக்க வைத்துக்கொண்டு உள்ளது. அடைக்கலராஜ் தவிர அனந்த நம்பியார், கல்யாண சுந்தரம், ரெங்கராஜன் குமார மங்கலம், தலித் எழில்மலை ஆகிய வெளியூர்களில் வந்தவர்களையும் வெற்றி பெற வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள் திருச்சி தொகுதி வாக்காளர்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளன. இதை வைத்து பார்த்தால் இந்த தொகுதியில் தற்போது அ.தி.மு.க, தி.மு.க.வின் பலம் சம அளவில் தான் உள்ளது. தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ந்த டாக்டர் இளங்கோவன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அ.ம.மு.க. சார்பில் சாருபாலா தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆனந்தராஜா ஆகியோர் உள்பட 24 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். ஏற்கனவே 2 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று தோல்வியை தழுவிய சாருபாலா தொண்டைமான் மூன்றாவது முறையாக அ.ம.மு.க. சார்பில் களம் இறங்கி உள்ளார். எனவே போட்டி கடுமையாக தான் இருக்கும் என்றே கருதப்படுகிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற 16 தேர்தல்களில் கம்யூனிஸ்டு கட்சிகள் 4 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், ஒரு இடைத்தேர்தல் உள்பட 3 தேர்தல்களில் அ.தி.மு.க.வும், பாரதீய ஜனதா 2 தேர்தல்களிலும், தி.மு.க, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளன. அ.தி.மு.க. 1972–ல் தொடங்கப்பட்டிருந்தாலும் திருச்சியில் முதன் முதலாக போட்டியிட்டது 2001 இடைத்தேர்தலில் தான். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்று உள்ளது. அதன் பின்னர் 2009–ல் இருந்து தொகுதியை தக்க வைத்துக்கொண்டு உள்ளது. அடைக்கலராஜ் தவிர அனந்த நம்பியார், கல்யாண சுந்தரம், ரெங்கராஜன் குமார மங்கலம், தலித் எழில்மலை ஆகிய வெளியூர்களில் வந்தவர்களையும் வெற்றி பெற வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள் திருச்சி தொகுதி வாக்காளர்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளன. இதை வைத்து பார்த்தால் இந்த தொகுதியில் தற்போது அ.தி.மு.க, தி.மு.க.வின் பலம் சம அளவில் தான் உள்ளது. தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ந்த டாக்டர் இளங்கோவன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அ.ம.மு.க. சார்பில் சாருபாலா தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆனந்தராஜா ஆகியோர் உள்பட 24 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். ஏற்கனவே 2 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று தோல்வியை தழுவிய சாருபாலா தொண்டைமான் மூன்றாவது முறையாக அ.ம.மு.க. சார்பில் களம் இறங்கி உள்ளார். எனவே போட்டி கடுமையாக தான் இருக்கும் என்றே கருதப்படுகிறது. 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்று இருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் 3 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 3 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றி பெற்று உள்ளன. இந்த தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– ஸ்ரீரங்கம் (அ.தி.மு.க. வெற்றி) எஸ்.வளர்மதி (அ.தி.மு.க.) ...............................1,08,400 எம்.பழனியாண்டி (தி.மு.க.)...............................93,991 ராஜேஷ்குமார் (பா.ஜ.க.).................................... 5,988 வி. புஷ்பம் (இந்திய கம்யூ.)........................... 5,646 திருச்சி மேற்கு (தி.மு.க. வெற்றி) கே.என்.நேரு (தி.மு.க.).............................92,049 ஆர். மனோகரன் (அ.தி.மு.க.)...........................63,634 ஜோசப் ஜெரால்டு (தே.மு.தி.க.).........................11,469 மனோகரன் (நாம் தமிழர் கட்சி)...........................3,080 திருச்சி கிழக்கு (அ.தி.மு.க. வெற்றி) வெல்லமண்டி என். நடராஜன் (அ.தி.மு.க.)........79,938 ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங்.)...................58,044 டாக்டர் ரொகையா (ம.தி.மு.க.)................. 9,694 ராஜய்யன் (பா.ஜ.க.)..............................7,210 திருவெறும்பூர் (தி.மு.க. வெற்றி) அன்பில் மகேஷ் பொய்யாமொழி (தி.மு.க.)..............85,950 கலைச்செல்வன் (அ.தி.மு.க.).............................69,255 செந்தில்குமார் (தே.மு.தி.க.)...............................13,155 சோழ சூரன் (நாம் தமிழர் கட்சி)...........................3,353 கந்தர்வகோட்டை (தனி) (அ.தி.மு.க. வெற்றி) ஆறுமுகம் (அ.தி.மு.க.).....................................64,043 அன்பரசன் (தி.மு.க.)........................................60,996 சின்னத்துரை (மார்க்.கம்யூ.)..............................13,918 புரட்சி கவிதாசன் (பா.ஜ.க.)...............................1600 புதுக்கோட்டை (தி.மு.க. வெற்றி) பெரியண்ணன் அரசு (தி.மு.க.)........................ 66,739 கார்த்திக் தொண்டைமான் (அ.தி.மு.க.)..................64,655 சொக்கலிங்கம் (சுயே).......................................22,973 ஜாகீர் உசேன் (தே.மு.தி.க.)...............................7,810

வேட்பாளர் பட்டியல்

ஆனந்த ராஜா.வி

மக்கள் நீதி மய்யம்

திருச்சிராப்பள்ளி

சாருபாலா.ஆர்

அ.ம.மு.க

திருச்சிராப்பள்ளி

வினோத்.வி

நாம் தமிழர்

திருச்சிராப்பள்ளி

திருநாவுக்கரசர்

காங்கிரஸ்

திருச்சிராப்பள்ளி

இளங்கோவன்.வி

தேமுதிக

திருச்சிராப்பள்ளி
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்