iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: திருநெல்வேலி


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1546212 ஆண் 758331
பெண் 787813 திருநங்கை 68
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. மனோஜ் பாண்டியன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-337166 2. ஞானதிரவியம் - திராவிட முன்னேற்ற கழகம்-522623-வெற்றி 3. மைக்கேல் ராயப்பன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-62209 4. வெண்ணிமலை - மக்கள் நீதி மய்யம்-23100 5. சத்யா - நாம் தமிழர் கட்சி-49898 6. இசக்கியம்மாள் - பகுஜன் சமாஜ் கட்சி-3462 7. சிவசங்கர் - ஜம்மு காஷ்மீர் தேசிய பாந்தர் கட்சி-1251 8. செல்வகணேசன் - யுனைட்டேட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா பார்டி-1244 9. ராமகிருஷ்ணன் - நாம் இந்தியர் கட்சி-1688 10. இந்துராணி - சுயேச்சை-896 11. கமலக்கண்ணன் - சுயேச்சை-479 12. செல்வபிரகாஷ் - சுயேச்சை-779 13. பகவதிகேசன் - சுயேச்சை -879 14. பால்சாலமன் பாண்டியன் - சுயேச்சை-1407 15. ஏ.மகாராஜன் - சுயேச்சை-3940 16. வி.மகாராஜன் - சுயேச்சை-5137 17. மணிகண்டன் - சுயேச்சை-1084 18. ஜி.மணிகண்டன் - சுயேச்சை-1958 19. மனோகரன் - சுயேச்சை-2095 20. முருகேசன் - சுயேச்சை-3430 21. மோகன்ராஜ் - சுயேச்சை-630 22. ராமசுவாமி - சுயேச்சை-529 23. ராமமூர்த்தி - சுயேச்சை-586 24. ராஜ்குமார் - சுயேச்சை-771 25. ராஜீவ் - சுயேச்சை -628 26. ரத்தினசிகாமணி - சுயேச்சை-934 27.நோட்டா-10958 நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். விவசாயிகள் நிறைந்த தொகுதி. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதி இது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லை நாடாளுமன்ற தொகுதி என்பது நெல்லை– தூத்துக்குடி மாவட்டத்துக்கு பொதுவாக இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் இருந்தன. தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பிறகு திருச்செந்தூர் தொகுதியானது, பின்னர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியாக மாற்றப்பட்டது. இதில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய சட்டசபை தொகுதிகள் சேர்க்கப்பட்டன. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 தொகுதிகள் சேர்க்கப்பட்டன. 7 முறை அ.தி.மு.க. வெற்றி நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் 1952–ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தானுப்பிள்ளை வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து 1957–ம் ஆண்டு தேர்தலிலும் தானுப்பிள்ளை வெற்றி பெற்றார். 1962–ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முத்தையா வெற்றி பெற்றார். தொடர்ந்து 3 முறையாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1967–ம் ஆண்டு நடந்த தேர்தலில் சுதந்திரா கட்சி வேட்பாளர் சேவியர் வெற்றி பெற்றார். 1971–ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் முருகானந்தம் சுதந்திரா கட்சி வேட்பாளர் பழனி சுவாமிநாதனை வீழ்த்தினார். 1977–ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980–ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சிவபிரகாசம், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆலடி அருணாவை வீழ்த்தி வெற்றி கண்டார். 1984–ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. இந்த தொகுதியை கைப்பற்றியது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ஜனார்த்தனன், தி.மு.க. வேட்பாளர் சிவபிரகாசத்தை தோற்கடித்தார். அவர் தொடர்ந்து 1989, 1991–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 3 முறை அ.தி.மு.க. நெல்லை தொகுதியை கைப்பற்றியது. 1996–ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. தி.மு.க. வேட்பாளர் சிவப்பிரகாசம், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசெல்வத்தை தோற்கடித்தார். 1998–ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரத்குமாரை, அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ஜனார்த்தனன் தோற்கடித்தார். இதைத்தொடர்ந்து 1999–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.எச்.பாண்டியன் வெற்றி பெற்றார். 2004–ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தன், அ.தி.மு.க. வேட்பாளர் அமிர்தகணேசை தோற்கடித்தார். 2009–ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றார். 2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி.பிரபாகரன் 3 லட்சத்து 98 ஆயிரத்து 139 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சி.தேவதாசசுந்தரம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 40 ஓட்டுகள் பெற்றார். 1 லட்சத்து 26 ஆயிரத்து 99 ஓட்டுகள் வித்தியாசத்தில் கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றி பெற்றார். நெல்லை தொகுதி 16 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. இதில் 7 முறை அ.தி.மு.க.வும், 5 முறை காங்கிரஸ் கட்சியும், 2 முறை தி.மு.க.வும், ஒரு முறை இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், ஒரு முறை சுதந்திரா கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நாடார், தேவர், ஆதிதிராவிடர், பிள்ளைமார் சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். யாதவர், பிராமணர் உள்ளிட்ட சமுதாயத்தினரும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர். தொடரும் பிரச்சினைகள் நெல்லை தொகுதி மக்களின் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும். மழை காலங்களில் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க நம்பியாறு, கருமேனியாறு, தாமிரபரணி ஆறு நதிநீர் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள பல ‌ஷட்டர்கள் சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும். அணைகள், குளங்களை தூர்வார வேண்டும். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும். முக்கியமான இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இளைஞர்களுக்கு புதிய தொழில்களை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். இதற்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. பீடி தொழிலும் நெல்லை தொகுதியில் பிரபலமானது. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்களின் விவரம் வருமாறு:– கே.ஆர்.பி.பிரபாகரன் (அ.தி.மு.க.)..................3,98,139 சி.தேவதாசசுந்தரம் (தி.மு.க.)...........................2,72,040 எஸ்.சிவனணைந்தபெருமாள்(தே.மு.தி.க.)......1,27,370 எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்)............................62,863 மை.பா.ஜேசுராஜ் (ஆம் ஆத்மி).......................... 18,353 வெற்றி யார் கையில்? நெல்லை தொகுதியை பொறுத்தவரையில் 7 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 2016–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நாங்குநேரி தொகுதியை பிடித்துள்ளது. அம்பை, ராதாபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி 4 சட்டசபை தொகுதிகளை கைவசம் வைத்துள்ளது. இருந்தபோதும், நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.–தி.மு.க. கூட்டணி இடையே போட்டி பலமாக இருக்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, 14 லட்சத்து 19 ஆயிரத்து 585 வாக்காளர்கள் இருந்தனர். இது 5 ஆண்டுகளில் 15 லட்சத்து 26 ஆயிரத்து 645 வாக்காளர்களாக உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலைவிட 1 லட்சத்து 7 ஆயிரத்து 60 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்த இளம்வாக்காளர்கள் அளிக்கப்போகும் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும். நெல்லை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியனும், தி.மு.க. சார்பில் ஞானதிரவியமும் களத்தில் நிற்கிறார்கள். அ.ம.மு.க. சார்பில் மைக்கேல் ராயப்பனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் வெண்ணிமலையும் போட்டியிடுகின்றனர். தொகுதியில் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் 15,26,645 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,49,127, பெண் வாக்காளர்கள் 7,77,452, திருநங்கைகள் 66 ஆகும். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:– நெல்லை ....................... 2,74,069 பாளையங்கோட்டை........ 2,58,905 ஆலங்குளம்................... 2,49,596 அம்பை........................... 2,39,006 நாங்குநேரி..................... 2,51,886 ராதாபுரம்........................ 2,53,183 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றிருக்கும் 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– நெல்லை (தி.மு.க. வெற்றி) ஏ.எல்.எஸ்.லட்சுமணன் (தி.மு.க.)............ 81,761 நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.).......... 81,160 எஸ்.மாடசாமி (தே.மு.தி.க.)....................... 8,640 ஏ.மகராஜன் (பா.ஜனதா) ........................... 6,017 பாளையங்கோட்டை (தி.மு.க. வெற்றி) டி.பி.எம்.மைதீன்கான் (தி.மு.க.).............. 67,463 எஸ்.கே.ஏ.ஹைதர் அலி (அ.தி.மு.க.)...... 51,591 கே.எம்.ஏ.நிஜாம் (ம.தி.மு.க).................... 12,593 நிர்மல்சிங் யாதவ் (பா.ஜனதா)................... 7,063 ஆலங்குளம் (தி.மு.க. வெற்றி) பூங்கோதை (தி.மு.க.).....................................88,891 எப்.சி.கார்த்திகேயன் (அ.தி.மு.க.)................. 84,137 ராஜேந்திரநாத் (தே.மு.தி.க).............................7,784 எஸ்.வி.அன்புராஜ் சுப்பிரமணியன்(பா.ஜனதா).. 4,660 அம்பை (அ.தி.மு.க. வெற்றி) ஆர்.முருகையா பாண்டியன் (அ.தி.மு.க.).......... 78,555 இரா.ஆவுடையப்பன் (தி.மு.க.).......................... 65,389 பி.கற்பகவள்ளி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)........ 13,690 வி.சசிகலா (பா.ஜனதா)........................................ 4,711 நாங்குநேரி (காங்கிரஸ் வெற்றி) எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்)..................74,932 மா.விஜயகுமார் (அ.தி.மு.க.)................. 57,617 கே.ஜெயபாலன் (தே.மு.தி.க.)................. 9,446 வி.மணிகண்டன் (பா.ஜனதா)....................6,609 ராதாபுரம் (அ.தி.மு.க. வெற்றி) ஐ.எஸ்.இன்பதுரை (அ.தி.மு.க.)........................ 69,590 மு.அப்பாவு (தி.மு.க.)........................................ 69,541 எஸ்.கனி அமுது (பா.ஜனதா)............................ 11,131 எஸ்.சிவனணைந்த பெருமாள்(தே.மு.தி.க)........ 8,362

வேட்பாளர் பட்டியல்

மனோஜ் பாண்டியன்.பி.எச்

அதிமுக

திருநெல்வேலி

வெண்ணிமலை.எம்

மக்கள் நீதி மய்யம்

திருநெல்வேலி

சத்யா.பா

நாம் தமிழர்

திருநெல்வேலி

ஞான திரவியம்

திமுக

திருநெல்வேலி

மைக்கேல் ராயப்பன்.எஸ்

அ.ம.மு.க

திருநெல்வேலி
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்