iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: திருப்பூர்


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1529836 ஆண் 762935
பெண் 766765 திருநங்கை 136
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாரு; 1. அய்யனார்.சி - பகுஜன் சமாஜ் கட்சி-7321 2. ஆனந்தன்.எம். எஸ் .எம் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் -415357 3 . சுப்பராயன்.கெ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-508725 -வெற்றி 4. சந்திர குமார்.வி.எஸ் - மக்கள் நீதி மய்யம்-508725 5. ஜகன்நாதன்.பி - நாம் தமிழ்ர் கட்சி-42189 6. கதிரேசன்.எல் - சுயேட்சை-3476 7. கனகராஜ்.பி - சுயேட்சை-1520 8. குமார்.டி - சுயேட்சை-1599 9. செந்தில்வேல்.அ - சுயேட்சை-1899 10. செல்வம்.எஸ்.ஆர் - சுயேட்சை-43816 11. ராஜ் குமார்.எஸ் - சுயேட்சை-4481 12. ஜகன்நாதன்.பி - ராஷ்திய சமாஜ் பக்‌ஷா-2683 13.நோட்டா-21861 டாலர் சிட்டி என்று பெயர் பெற்ற திருப்பூரை உள்ளடக்கியது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. இங்கு பின்னலாடை தொழில் நிறுவனங்கள், விவசாயம் நிறைந்த பகுதியாகும். தமிழ்நாட்டில் கடந்த 2009–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் புதிதாக 13 நாடாளுமன்ற தொகுதிகள் உருவாக்கப்பட்டன. அதில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியும் ஒன்று. தொகுதி மறுசீரமைப்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிப்பாளையம் நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பவானி, கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. திருப்பூர் மாநகரம் பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்களை அதிகம் கொண்ட பகுதியாக திருப்பூர் விளங்கி வருகிறது. வேலை தேடி வருபவர்களுக்கு வேலை வழங்கி, வந்தாரை வாழவைக்கும் ஊராக திருப்பூர் விளங்கி வருகிறது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது, தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து 2 முறை அ.தி.மு.க.வே வென்றுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சி.சிவசாமி 2 லட்சத்து 95 ஆயிரத்து 731 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்வேந்தன் 2 லட்சத்து 10 ஆயிரத்து 385 ஓட்டுகள் பெற்றார். 2014–ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளராக களமிறக்கப்பட்ட சத்யபாமா, தே.மு.தி.க. வேட்பாளர் தினேஷ்குமாரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 315 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சத்யபாமா எம்.பி.யாக பதவியேற்ற பிறகு திருப்பூர் ரெயில் நிலையத்தில் சரக்கு முன்பதிவு மையம் தனியாக தொடங்கப்பட்டது. அதுபோல் திருப்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. திருப்பூர் பகுதி தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திரமோடி திருப்பூர் வந்து அடிக்கல் நாட்டி சென்றுள்ளார். பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மேம்பாட்டு பணிகளுக்கு எம்.பி. நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து செயல்படுத்தியுள்ளார். விஜயமங்கலம்–வாயிபாடி தரைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார். பவானி ஜமுக்காளம் உற்பத்திக்கு 12 சதவீதம் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 5 சதவீதமாக குறைக்க உதவி செய்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள கொடிவேரி அணையை அழகுபடுத்த ரூ.80 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தியூர் தொகுதியில் தமிழ்நாடு–கர்நாடகா எல்லையை இணைக்கும் வகையில் 43 கிலோ மீட்டர் தொலைவு சாலை ரூ.70 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஊத்துக்குளி ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம், பாலக்காடு–திருச்சி பயணிகள் ரெயிலை ஊத்துக்குளியில் நின்று செல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் களம் காண்கிறார். தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் எம்.பி. சுப்பராயன் போட்டியிடுகிறார். தீர்க்கப்படாத பிரச்சினைகள் திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் பின்னலாடை தொழில் பிரதானம். மற்ற பகுதிகளில் விவசாயம் நடக்கிறது. ஜாப்ஒர்க் தொழிலாளர்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிக்கப்பட்டனர். மேலும் பின்னலாடை தொழிலுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை குறைப்பால் உற்பத்தியாளர்கள் சிரமத்தில் உள்ளனர். திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் பாலப்பணிகள் இன்னும் முடிவடையாமல் பாதியிலேயே உள்ளன. போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாக நீடித்து வருகிறது. கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் சினிமா படப்பிடிப்புகள் அதிகமாக நடந்து வந்தது. படப்பிடிப்புகள் நடத்த அனுமதி பெறுவதில் விதிமுறைகள் மாற்றப்பட்டதன் காரணமாக சினிமா படப்பிடிப்பு பெருமளவு குறைந்து விட்டன. தடப்பள்ளி–அரக்கன்கோட்டை பாசன திட்டத்தால் அந்த பகுதியில் அதிக நெல் விவசாயம் நடந்து வருகிறது. விளைபொருட்களை இருப்பு வைக்கும் கிடங்கு வசதி செய்யப்படாமல் உள்ளது. அந்தியூர் தொகுதி மலைப்பகுதியாகும். வறண்ட பகுதியாக இருப்பதால் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீரை கொண்டு செல்வதற்காக திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. பெருந்துறை சிப்காட் பகுதியில் இருந்து கழிவுநீர் அதிகம் வெளியேறுகிறது. இதை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இதற்கு உரிய ஏற்பாடுகள் நடைபெறவில்லை. இந்த பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மக்கள் ஆறுதல் பெற்று இருக்கிறார்கள். அதுபோல் அத்திக்கடவு–அவினாசி நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில் திட்டம் நிறைவேற்றும்போது பெருந்துறை பகுதியில் விவசாயம் வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பவானி பகுதியில் கைத்தறி ஜமுக்காளம் உற்பத்தி முக்கிய தொழிலாக இருக்கிறது. ஆனால் இந்த தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. பின்னலாடை மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் இன்னும் ஏராளம் உள்ளன. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்யபாமா வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– வி.சத்யபாமா (அ.தி.மு.க.)...........................4,42,778 என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)..................2,63,463 எம்.செந்தில்நாதன் (தி.மு.க.)........................2,05,411 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்)........47,554 கே.சுப்பராயன் (இ.கம்யூனிஸ்டு)......................33,331 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– பெருந்துறை (அ.தி.மு.க. வெற்றி) தோப்பு வெங்கடாசலம் (அ.தி.மு.க.) 80,292 மோகன சுந்தரம் (தி.மு.க.) 67,521 பாலு (சுயேச்சை 14,545 சண்முகம் (த.மா.கா.) 6,304 சந்திரசேகர் (பா.ஜ.க.) 2,625 பவானி (அ.தி.மு.க. வெற்றி) கே.சி.கருப்பணன் (அ.தி.மு.க.) 85,748 சிவக்குமார் (தி.மு.க.) 60,861 ராமநாதன் (பா.ம.க.) 20,727 கோபால் (தே.மு.தி.க.) 6,927 சந்திரசேகர் (சுயேச்சை) 4,389 அந்தியூர் (அ.தி.மு.க. வெற்றி) ராஜா என்ற ராஜா கிருஷ்ணன் (அ.தி.மு.க.) 71,575 வெங்கடாசலம் (தி.மு.க.) 66,263 கோபால் (பா.ம.க.) 11,570 ராஜா (சுயேச்சை)..........................................5,995 சம்பத் (தே.மு.தி.க.)......................................5,828 கோபிச்செட்டிப்பாளையம் (அ.தி.மு.க. வெற்றி) கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க.)........,96,177 சரவணன் (காங்கிரஸ்)...............................84,954 ஏ.எம்.முனுசாமி (மா.கம்யூனிஸ்டு).................7,531 சிவராஜ் (சுயேச்சை)......................................3,341 கே.கணபதி (பா.ஜ.க.)..................................3,149 திருப்பூர் வடக்கு (அ.தி.மு.க. வெற்றி) கே.என்.விஜயகுமார் (அ.தி.மு.க.) 1,06,717 மு.பெ.சாமிநாதன் (தி.மு.க.) 68,943 எம்.ரவி (இ.கம்யூனிஸ்டு) 20,061 சின்னசாமி (பா.ஜ.க.) 8,397 ரவிச்சந்திரன் (சுயேச்சை) 3,988 திருப்பூர் தெற்கு (அ.தி.மு.க. வெற்றி) சு.குணசேகரன் (அ.தி.மு.க.) 73,351 க.செல்வராஜ் (தி.மு.க.) 57,418 கே.தங்கவேல் (மா.கம்யூனிஸ்டு) 13,597 பாயிண்ட் மணி (பா.ஜ.க.) 7,640 பஷீர் அகமது (சுயேச்சை) 2,547 வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 15,11,643 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,54,593. பெண் வாக்காளர்கள் 7,56,922. 3–ம் பாலினத்தவர் 128. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:– பெருந்துறை..................................... 2,15,681 பவானி............................................ 2,32,254 அந்தியூர்.......................................... 2,11,594 கோபிச்செட்டிப்பாளையம்................. 2,45,208 திருப்பூர் வடக்கு.............................. 3,48,438 திருப்பூர் தெற்கு............................... 2,58,468 வெற்றி யார் கையில்? திருப்பூர் தொகுதியில் கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் அ.தி. மு.க. தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்த முயற்சி மேற்கொள்ளும். 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திருப்பூர் தொகுதியில் உள்ள பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது. எனவே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலம் பெற்று திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திருப்பூர் தொகுதியில் மொத்தம் 13,75,589 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் 1,36,054 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே புதிய வாக்காளர்களின் ஓட்டும் வெற்றியை நிர்ணயிப்பதில் துருப்பு சீட்டாக இருக்கும். திருப்பூர் தொகுதி எம்.பி.யின் 5 ஆண்டு கால செயல்பாடு குறித்து மக்களிடம் கேட்டபோது, எம்.பி. கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளார். திருப்பூரில் எம்.பி. அலுவலகம் தனியாக இல்லை. இதனால் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மக்கள் எம்.பி.யை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிப்பதில் சிரமம் ஏற்பட்டது. மக்களுக்கு எம்.பி.யை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். நாடாளுமன்றத்தில் தொகுதி கோரிக்கையை நிறைவேற்ற அதிகப்படியான கேள்வி எழுப்பிய எம்.பி. என்ற பெயர் பெற்றாலும் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றித்தரவில்லை. திருப்பூர் பின்னலாடை துறைக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பதில் போதிய முனைப்பு காட்டவில்லை. மாவட்டத்தின் தலைநகரான திருப்பூருக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டுமே வருகிறார் என்றனர்.

வேட்பாளர் பட்டியல்

சுப்பாராயன்.கே

சிபிஐ

திருப்பூர்

ஜகன்நாதன்.பி

நாம் தமிழர்

திருப்பூர்

சந்திரகுமார்.வி.எஸ்

மக்கள் நீதி மய்யம்

திருப்பூர்

ஆனந்தன்.எம்.எஸ்.எம்

அதிமுக

திருப்பூர்

செல்வம்.எஸ்.ஆர்

அ.ம.மு.க

திருப்பூர்
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்