iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • ரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • ரெட் அலர்ட் எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • |

தொகுதி: திருவள்ளூர் (தனி)


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1946242 ஆண் 961864
பெண் 984032 திருநங்கை 346
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------------ 1. வேணுகோபால் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 410337 2. ஜெயக்குமார் - காங்கிரஸ் - 767292 (வெற்றி) 3. பொன்ராஜா - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 33944 4. வெற்றிச்செல்வி - நாம் தமிழர் கட்சி - 65416 5. லோகரங்கன் - மக்கள் நீதிமய்யம் - 73731 6. அன்புசெழியன் - பகுஜன் சமாஜ் - 15187 7. கலாநிதி - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 4162 8. ரவி பறையனார் - இந்திய குடியரசு கட்சி - 1760 9. அருள்ராஜ் - சுயேச்சை - 872 10. ஆனந்தராஜ் - சுயேச்சை - 789 11. கமலநாதன் - சுயேச்சை - 705 12. குணசேகரன் - சுயேச்சை - 908 13. சந்திரசேகர் - சுயேச்சை - 762 14. சற்குணம் - சுயேச்சை - 723 15. பாரத் - சுயேச்சை - 1977 16. மணிகண்டன் - சுயேச்சை - 3126 17. முருகேசன் - சுயேச்சை - 3185 18. விக்ரமன் - சுயேச்சை - 1942 19. விஜயா - சுயேச்சை - 2368 20. ஜார்ஜ் - சுயேச்சை - 728 21. எவரும் இல்லை - 18275 திருவள்ளூர்(தனி) நாடாளுமன்ற தொகுதி சென்னைக்கு மிக அருகில் உள்ள தொகுதியாகும். விவசாயம், தொழிற்சாலைகள் மிகுந்த தொகுதி. கடந்த 2009–ம் ஆண்டு வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஒரு பகுதியாக இருந்து தொகுதி மறு சீரமைப்பின் மூலம் திருவள்ளூர் (தனி) தொகுதியாக மாறி உள்ளது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி (தனி), திருவள்ளூர், ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. கடந்த 2009–ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 3 லட்சத்து 68 ஆயிரத்து 294 ஓட்டுகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் காயத்ரிஸ்ரீதரன் 3 லட்சத்து 36 ஆயிரத்து 621 ஓட்டுகள் பெற்றார். 2014–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலே மீண்டும் போட்டியிட்டு 6 லட்சத்து 28 ஆயிரத்து 499 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் 3 லட்சத்து 50 ஆயிரத்து 69 ஓட்டுகள் பெற்றார். இதன் மூலம் வேணுகோபால் 3 லட்சத்து 23 ஆயிரத்து 430 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பி. என்ற பெருமையையும் பெற்றார். இவர் எம்.பி.யாக பதவி ஏற்றவுடன் ரூ.5 ஆயிரத்து 500 கோடியில் கியாஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் நகரும் மின் படிக்கட்டுகள், லிப்ட் வசதி, திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டு வசதி அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருநின்றவூரில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டி கொடுத்துள்ளார். குறிப்பாக இவர் நெமிலிச்சேரியில் ரெயில் நிலையத்தை கொண்டு வந்து அங்கு ரெயில்வே சுரங்கப்பாதையும் அமைத்து கொடுத்துள்ளார். திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 70 கட்டில் படுக்கைகள், டயாலிஸ் எந்திரம் மற்றும் மாதவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 20 கட்டில் மெத்தைகள் டயாலிஸ் எந்திரம் வசதியும் செய்து கொடுத்துள்ளார். தன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 250 இடத்தில் உயர்மின்விளக்கு கோபுரங்களும் அமைத்து கொடுத்துள்ளார். பழவேற்காடு பகுதியில் மீனவர்கள் வசதிக்காக ரூ.1½ கோடியில் முகத்துவாரம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் இவர் பல பணிகளை செய்தாலும் திருவள்ளூர் தொகுதியில் நிறைவேறாத பணிகள் உள்ளது. கடம்பத்தூர் ரெயில்வே மேம்பாலம், புட்லூர் ரெயில்வே மேம்பாலம், வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலம், செவ்வாப்பேட்டை ரெயில்வே மேம்பாலம், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரெயில்வே மேம்பாலம் போன்ற பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது. திருவள்ளூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடையவில்லை. திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் புறவழிச்சாலை இன்னமும் கேள்விக்குறியாக உள்ளது. திருவள்ளூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லும் என்ற கோரிக்கைகளும் நிறைவேற்றித்தரவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. வாக்காளர்கள் எவ்வளவு? கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 19,20,372 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்– 9,49,684, பெண் வாக்காளர்கள்– 9, 70,347. 3–ம் பாலினத்தவர்– 341. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:– கும்மிடிப்பூண்டி 2,64,335 பொன்னேரி (தனி) 2,51,050 திருவள்ளூர் 2,58,595 பூந்தமல்லி (தனி) 3,27,050 ஆவடி 4,01,397 மாதவரம் 4,17,945 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர்(தனி) தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் பி.வேணுகோபால் வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– பி.வேணுகோபால் (அ.தி.மு.க.) 6,28,499 ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) 3,05,069 யுவராஜ் (தே.மு.தி.க.) 2,04,734 ஜெயக்குமார் (காங்கிரஸ்) 43,960 எஸ்.கண்ணன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) 13,794 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திருவள்ளூர்(தனி) நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றிருக்கும் 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– கும்மிடிப்பூண்டி (அ.தி.மு.க. வெற்றி) கே.எஸ்.விஜயகுமார்(அ.தி.மு.க.) 89,332 சி.எச்.சேகர் (தி.மு.க.) 65,937 எம்.செல்வராஜ் (பா.ம.க.) 43,055 கே.கீதா (தே.மு.தி.க.) 6,585 எம்.பாஸ்கரன் (பா.ஜ.க.) 2,092 பொன்னேரி (தனி) – (அ.தி.மு.க. வெற்றி) பி.பலராமன் (அ.தி.மு.க.) 95,979 கே.பரிமளம் (தி.மு.க.) 76,643 ஏ.பாண்டியன்(பா.ம.க.) 9,586 வி.செந்தில்குமார்(விடுதலை சிறுத்தைகள் கட்சி) 5,566 கே.கணேசன்(பா.ஜ.க.) 2,067 திருவள்ளூர் (தி.மு.க. வெற்றி) வி.ஜி.ராஜேந்திரன் (தி.மு.க.) 80,473 அ.பாஸ்கரன்(அ.தி.மு.க.) 75,335 வ.பாலயோகி(பா.ம.க.) 31,935 அ.பாலசுப்பிரமணி(விடுதலை சிறுத்தைகள் கட்சி) 7,006 எம்.பிரேம் சேகர் (பகுஜன் சமாஜ் கட்சி) 2,171 கே.சீனிவாசன் ( பா.ஜ.க.) 1,826 பூந்தமல்லி (தனி) (அ.தி.மு.க.) வெற்றி டி.ஏ.ஏழுமலை (அ.தி.மு.க.) 1,03,952 ஐ.பரந்தாமன் (தி.மு.க.) 92,189 சி.பார்த்தசாரதி (பா.ம.க.) 15,827 பி.கந்தன் (ம.தி.மு.க.) 15,051 அமர்நாத் (பா.ஜ.க.) 3,456 ஆவடி (அ.தி.மு.க.) வெற்றி க.பாண்டியராஜன் (அ.தி.மு.க.) 1,08,064 சா.மு.நாசர் (தி.மு.க.) 1,06,669 ஆர்.அந்திரிதாஸ் (ம.தி.மு.க.) 22,848 என்.ஆனந்தகிருஷ்ணன் (பா.ம.க.) 12,428 ஜெ.லோகநாதன் (பா.ஜ.க.) 7,232 மாதவரம் (தி.மு.க.) வெற்றி சுதர்சனம் (தி.மு.க.) 1,22,082 தட்சிணாமூர்த்தி (அ.தி.மு.க.) 1,06,829 ரவிராஜ் (பா.ம.க.) 14,245 ஏ.எஸ்.கண்ணன்(இந்திய கம்யூன்ஸ்டு கட்சி) 9,383 ஜானகிராமன் (பா.ஜ.க.) 5,161 வெற்றி யார் கையில்? திருவள்ளூர்(தனி) நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2 முறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை அவர் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளார். அதே வெற்றியை இந்த முறையும் அ.தி.மு.க. பதிவு செய்யுமா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி(தனி), பூந்தமல்லி, ஆவடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. திருவள்ளூர், மாதவரம் சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.ஏ.ஏழுமலை தகுதி நீக்கம் செய்யப்பட்டு டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறார். திருவள்ளூர் எம்.பி.யின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது:– இவர் அவ்வப்போது நடைபெறும் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். மற்றபடி இவரை பார்க்க முடியவில்லை. இவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்றி தரவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

வேட்பாளர் பட்டியல்

ஜெயக்குமார்.கே

காங்கிரஸ்

திருவள்ளூர் (தனி)

டாக்டர்.எம்.லோகரங்கன்

மக்கள் நீதி மய்யம்

திருவள்ளூர் (தனி)

பொன்.ராஜா

அ.ம.மு.க

திருவள்ளூர் (தனி)

டாக்டர்.பி.வேணுகோபால்

அதிமுக

திருவள்ளூர் (தனி)

வெற்றிச்செல்வி.ம

நாம் தமிழர்

திருவள்ளூர் (தனி)
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்