iFLICKS தொடர்புக்கு: 8754422764

தொகுதி: வேலூர்


தொகுதி சுருக்கம்:

வாக்காளர்கள்
1885776 ஆண் 927537
பெண் 958120 திருநங்கை 119
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் பிற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர்ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கதிர்ஆனந்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எல்லாம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டபின்னர் ஆகஸ்ட் 5 ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவு 9 ந்ந்தேதி அறிவிக்கபட்டது இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்திய வரலாற்றில் இடம்பிடித்துள்ள முக்கிய நகரங்களில் வேலூர் மாநகரமும் ஒன்று. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை அவர்களிடமிருந்து மீட்க சுதந்திர போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர போராட்டத்துக்கு முதன் முதலில் வித்திட்ட சிப்பாய் புரட்சி வேலூரில் உள்ள கோட்டையில்தான் நடந்தது. சிப்பாய் புரட்சி நடந்த அந்த கோட்டை இன்றும் வேலூரில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 145 கிலோமீட்டர் தூரத்திலும், உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள திருவண்ணாமலையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும் வேலூர் மாநகரம் அமைந்துள்ளது. இது வேலூர் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் தண்ணீர் பிரச்சினைக்கு காரணமான பாலாறு கர்நாடகாவில் உற்பத்தியானாலும் தமிழ்நாட்டில்தான் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிகதூரம் ஓடுகிறது. இந்த பாலாறை நம்பித்தான் வேலூர் மாவட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. வேலூர் இந்த பாலாற்றின் கரையில்தான் அமைந்துள்ளது. காங்கிரஸ் 6 முறை வெற்றி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8-வது தொகுதியாக இருக்கும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி இதுவரை 16 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 17-வது தேர்தலை சந்திக்க இருக்கிறது. முதலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), அணைக்கட்டு, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம்(தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. வேலூர் நாடாளுமன்ற தொகுதி கடந்த 1951 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் அதிகமுறை வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 4 முறையும், அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன. அ.தி.மு.க. 2 முறையும், பா.ம.க. 2 முறையும், என்.சி.ஓ., சி.டபிள்யு.எல், மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். 1951 தேர்தலில் ராமச்சந்தர் (சி.டபிள்யு.எல்), எம்.முத்துகிருஷ்ணன் (காங்கிரஸ்) ஆகியோரும், 1957 தேர்தலில் எம்.முத்துகிருஷ்ணன், என்.ஆர்.முனியசாமி (காங்கிரஸ்) ஆகியோரும் வெற்றிபெற்றனர். 1962 தேர்தலில் அப்துல்வாஹித் (காங்கிரஸ்) வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து 1967 தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குசேலரும், 1971 தேர்தலில் ஆர்.பி.உலகநம்பியும் (தி.மு.க.) வெற்றிவாகை சூடினர். 1977 தேர்தலில் வி.தண்டாயுதபாணி (என்.சி.ஓ), 1980 தேர்தலில் ஏ.கே.ஏ.அப்துல் சமத் (சுயே) ஆகியோர் வெற்றிபெற்றனர். 1984 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் வெற்றிபெற்றார். 89 மற்றும் 91 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.கே.ஏ.அப்துல்சமத், பி.அக்பர்பாஷா ஆகியோர் வெற்றிபெற்றனர். 96 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பி.சண்முகமும், 98 மற்றும் 99 ஆகிய தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட என்.டி.சண்முகமும் வெற்றிபெற்றனர். 2004 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த கே.எம். காதர்மொய்தீனும், 2009 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல்ரகுமானும் வெற்றிபெற்றனர். கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.செங்குட்டுவன் வெற்றிவாகை சூடினார். பாலாற்றில் மணல் கொள்ளை, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலத்தல் ஆகியவை வேலூர் தொகுதியின் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. விவசாயத்தை பாதிக்கிறது. எனவே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்து தோல் தொழிற்சாலை மற்றும் ஷூ தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக இருக்கிறார்கள். அதேபோன்று வன்னியர்கள், முதலியார்கள் மற்றும் ஆதிதிராவிடர்களும் அதிக அளவில் உள்ளனர். பீடி தொழிலாளர்கள், நெசவுத்தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர். தத்தெடுத்த கிராமங்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற செங்குட்டுவன் சென்னையில் வக்கீல் தொழில் செய்துவருகிறார். இதனால் வேலூர் தொகுதியில் நடந்த எந்தவொரு அரசு விழாவிலும் கலந்துகொண்டது கிடையாது. தொகுதி பக்கமே வந்தது இல்லை, தேர்தலின்போது அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தொகுதி மக்கள் கூறுகின்றனர். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தான் வெற்றிபெற்றதும் 2014-ம் ஆண்டு ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அகரம்சேரி கிராமத்தை தத்தெடுத்தார். அப்போது அந்த கிராமத்தையும், ஆம்பூரையும் இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படும் என்றும், அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவரப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு இதுவரை அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. அதேபோன்று அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தை தத்தெடுப்பதாக 2017-ம் ஆண்டு அறிவித்தார். அதுவும் இதுவரை அறிவிப்பாக மட்டுமே உள்ளதாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வேலூர் தொகுதியில் 10,10,067 வாக்காளர்கள் இருந்தனர். இந்த தேர்தலில் 14,07,881 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 3,97,814 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும். மேலும் அ.தி.மு.க. சார்பில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலசுப்பிரமணி, குடியாத்தத்தில் வெற்றிபெற்ற ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றுவிட்டனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற செங்குட்டுவனும் தொகுதி பக்கமே வந்ததில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வெற்றி யார் கையில்? வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க. காங்கிரஸ், அ.தி.மு.க. என மாறி மாறி வெற்றிபெற்றுள்ளன. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள வேலூர், அணைக்கட்டு ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றது. ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. இந்த 4 தொகுதிகளில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குடியாத்தத்தில் வெற்றிபெற்ற ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூரில் வெற்றிபெற்ற பாலசுப்பிரமணி ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறியதால் அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு 2 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் பா.ம.க., தே.மு.தி.க., ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் அதே கட்சிகளும் (ஐ.ஜே.கே. தவிர), தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதனால் அ.தி.மு.க- தி.மு.க. இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. 1951 ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் சிடபிள்யூஎல் & காங்கிரஸ் 1957 எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி இருவரும் காங்கிரஸ் 1962 அப்துல் வாகித் காங்கிரசு 1967 குசேலர் திமுக 1971 உலகநம்பி திமுக 1977 தண்டாயுதபாணி என்.சி.ஓ. 1980 ஏ.கே.ஏ. அப்துல் சமது சுயேச்சை 1984 ஏ.சி.சண்முகம் அதிமுக 1989 ஏ.கே.ஏ. அப்துல் சமது காங்கிரசு 1991 அக்பர் பாஷா காங்கிரசு 1996 பி. சண்முகம் (வேலூர்) திமுக 1998 என். டி. சண்முகம் பாமக 1999 என். டி. சண்முகம் பாமக 2004 கே. எம். காதர் மொகிதீன் திமுக 2009 எம். அப்துல் ரஹ்மான் திமுக 2014 பி. செங்குட்டுவன் அ.தி.மு.க

வேட்பாளர் பட்டியல்

சண்முகம்.எ.சி.

புதிய நீதி

வேலூர்

கதிர் ஆனந்த்.டி.எம்

திமுக

வேலூர்

தீபா லட்சுமி

நாம் தமிழர்

வேலூர்
தேர்தல் செய்திகள்

மத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி

காஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள்